January 12, 2017

ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த புதிய அறிவிப்பு இப்போது இல்லை - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தகவல்.

📚 பள்ளிக் கல்வித் துறையில், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு 8,000 காலிப் பணியிடங்கள் உள்ளன. அவை விரைவில் நிரப்பப்படும். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தகவல்

🔷 இன்றைய (12.01.2017) நாளிதழ் தகவல்

தமிழகத்தில், 2011 முதல், ஆசிரியர் தகுதித் தேர்வான, 'டெட்' தேர்வு நடத்தப்படுகிறது. தேர்வில், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறை, தர பட்டியல் தயாரித்தல் போன்றவற்றில், சில பிரச்னைகள் ஏற்பட்டன.

🔴 இது குறித்து, உச்ச நீதிமன்றத்தில் தாக்கலான மனு, இரு மாதங்களுக்கு முன், தள்ளுபடி செய்யப்பட்டது.

🔵 இதனால், ஆசிரியர் தகுதித் தேர்வு, மூன்றாண்டுகளாக நடத்தப்படவில்லை.

🔴 இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு முடிவுக்கு வந்ததால், விரைவில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என, பள்ளிக் கல்வி அமைச்சர் பாண்டியராஜன் கூறியிருந்தார்.

🔵 இந்நிலையில், சென்னையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், அமைச்சர் பாண்டியராஜன் பங்கேற்றார். பின்,

📝 அவர் கூறியதாவது:


✔ 📚 பள்ளிக் கல்வித் துறையில், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு 8,000 காலிப் பணியிடங்கள் உள்ளன. அவை விரைவில் நிரப்பப்படும்



🔷 ஏற்கனவே, ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்தவர்கள் காத்திருப்பதால், அவர்கள் மூலம், காலி இடங்கள் நிரப்பப்படும்.

🔶 எனவே, ஆசிரியர் தகுதித் தேர்வை, உடனடியாக நடத்த வேண்டிய அவசியம் எழவில்லை.

🔷 புதிதாக தேர்வை நடத்தினால், அதில் தேர்ச்சி பெற்றவர்கள், தங்களுக்கும் வேலை இல்லை என்று கூறுவர்.

🔶 எனவே, ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு, தாமதமாகவே வெளியாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.




No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்