January 26, 2017

தமிழக வரலாற்றில் முதல் முறையாக குடியரசு தின விழாவில் முதலமைச்சர் கொடி ஏற்றினார்.



சென்னை: குடியரசு தின விழாவில், முதன் முறையாக, முதல்வர் பன்னீர்செல்வம், இன்று தேசியக் கொடியேற்றினார்.



சென்னையில், ஆண்டு தோறும் மெரினா கடற்கரையில், காந்தி சிலை அருகே, குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. மாநில கவர்னர் தேசியக் கொடியேற்றுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு, தமிழகத்திற்கு தனி கவர்னர் நியமிக்கப்படவில்லை. மஹாராஷ்டிரா கவர்னர் வித்யாசாகர் ராவ், தமிழகத்தின் பொறுப்பு கவர்னராக உள்ளார். இன்று, அவர் மஹாராஷ்டிராவில் நடைபெறும் குடியரசு தின விழாவில், தேசியக் கொடியேற்றுகிறார். எனவே, தமிழகத்தில் குடியரசு தின விழாவில், தேசியக் கொடியேற்றும் வாய்ப்பு, முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு கிடைத்துள்ளது.

இன்று காலை, 8:00 மணிக்கு, தேசியக் கொடியேற்றி வைத்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். அரசு துறைகளின் சாதனைகளை விளக்கும் வாகனங்களின் அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்