January 20, 2017

ஜல்லிக்கட்டு வழக்கில், ஒரு வாரத்துக்கு தீர்ப்பு வழங்கக் கூடாது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கோரிக்கை வைத்துள்ளது



🐮 ஜல்லிக்கட்டு வழக்கில், ஒரு வாரத்துக்கு தீர்ப்பு வழங்கக் கூடாது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கோரிக்கை வைத்துள்ளது.

🐮 மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி தாக்கல் செய்த இந்த மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்றது.

🐮 இதனால், அடுத்த ஒரு வாரத்துக்கு ஜல்லிக்கட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்காது.

🐮 ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு, மாநில அரசு அவசர சட்டம் கொண்டு வர உள்ளதாக, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று அறிவித்திருந்தார்.

🐮 தமிழக அரசின் இந்த நடவடிக்கைகளில் தலையிடாமல், இருப்பதற்காக, மத்திய அரசு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

  - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

🔴 ஜல்லிக்கட்டு வழக்கில் ஒரு வாரத்திற்கு தீர்ப்பு வெளியிட மாட்டோம் என சுப்ரீம் கோர்ட் மத்திய அரசுக்கு ஒப்புதல் வழங்கியது.

🔵 ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இது தொடர்பாக, அவசர சட்டம் பிறப்பிக்க முதல்வர் ஓ.பி.எஸ்., நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.

🔴 பிரதமர் மோடியும் மாநில அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு துணையாக இருக்கும் என்றார்.

🔵 இதன்படி அவசர சட்டம் பிறப்பிக்கும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

🔴 இந்நிலையில் ஜல்லிக்கட்டு விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

🔵 அவசர சட்டம் கொண்டு வரவுள்ள நிலையில் கோர்ட் தீர்ப்பு ஏதும் வழங்கி இடையூறு ஏற்படுத்தக்கூடாது என்பதற்காக மத்திய அரசு தரப்பில் வழக்கறிஞர் முகுல்ரோத்தகி இன்று சுப்ரீம் கோர்ட்டில் ஒரு அவசர மனுவை தாக்கல் செய்தார்.

🔴 இந்த மனுவில் ஜல்லிக்கட்டு தொடர்பாக ஒரு வாரத்திற்கு எவ்வித தீர்ப்பும் வழங்க கூடாது.

🔵 தமிழ அரசின் நடவடிக்கையில் கோர்ட் குறுக்கிடாமல் இருக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

🔴 இந்த மனுவை சுப்ரீம் கோர்ட் ஏற்று கொண்டு அவ்வாறு இருக்க நீதிபதிகள் ஒப்புதல் வழங்கினர்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்