January 15, 2017

"எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு: தாமதமாக வரும் மாணவர்களுக்கு அனுமதி இல்லை'.. - கர்நாடக மாநில கல்வித்துறை அறிவிப்பு.

    +2_exam

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வெழுதும் மாணவர்கள் தேர்வுக் கூடத்துக்கு தாமதமாக வந்தால் அவர்களுக்கு தேர்வெழுத அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று கர்நாடக மேல்நிலைக் கல்வி தேர்வு வாரிய இயக்குநர் யசோதாபோபண்ணா தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடைமுறைகளில் சீர்த்திருத்தம் கொண்டுவரப்பட்டு, வினா மற்றும் விடைத்தாளை ஒருங்கிணைத்து கையேடாக அளிக்கப்பட்டது.

இதே நடைமுறை கடந்த 10 ஆண்டுகளாக அமலில் இருந்து வருகிறது. இதனால், வினாத்தாள்களை வீட்டுக்கு எடுத்துச் சென்று தங்கள் ஆசிரியர்களுடன் விடைகளை விவாதிக்க இயலாத நிலை இருந்து வந்தது.

இதை கருத்தில் கொண்டு, நிகழ் கல்வியாண்டு முதல் எஸ்எஸ்எல்சி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வினாத்தாள் மற்றும் விடைத்தாள் தனித்தனியாக வழங்கப்படுகிறது. தேர்வு எழுதி முடித்ததும் மாணவர்கள் வினாத்தாளை வீட்டுக்கு எடுத்துச் செல்லலாம்.

அடுத்துவரும் மாணவர்களுக்கு அவை மாதிரி வினாத்தாளாக அமைய வாய்ப்புள்ளது.

எஸ்எஸ்எல்சி தேர்வுகள் தினமும் காலை 9.30 மணிக்குத் தொடங்குகின்றன. தேர்வு தொடங்கி அரைமணி நேரமானாலும் தேர்வு மையத்தில் மாணவர்களை அனுமதித்து வந்த நிலையை மாற்றி, காலை 9.15 மணி முதல் காலை 9.30 மணிக்குள் தேர்வு மையத்திற்கு வராத மாணவர்களுக்கு தேர்வெழுத அனுமதி வழங்கப்பட மாட்டாது. இதன் மூலம் ஒழுங்கீன நடவடிக்கைகள் தடுக்கப்படும் என அதில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்