January 22, 2017

அலங்காநல்லூர் பயணத்தை ரத்து செய்துவிட்டு சென்னை திரும்ப முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் முடிவு?


🐮 நத்தம், கோவில்பட்டியிலும் எதிர்ப்பு

🐮 மக்கள் எதிர்ப்பு: அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடக்க வாய்ப்பில்லை.

🐮 மதுரையில் முதவல்வர் பன்னீர்செல்வத்துடன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் ஆலோசனை

🐮 ஜல்லிக்கட்டு பாதுகாப்பு பேரவை ராஜசேகர், ஜல்லிக்கட்டு மீட்பு குழு ராஜேஷ்வுடன் முதலமைச்சர் பன்னீர் செல்வம் பேச்சுவார்த்தை

             - - - - - - - - - - - - - - - - - - - -
மதுரையில் ஜல்லிக்கட்டு நடத்த முடியாததால் அவர் இன்று சென்னை திரும்பவுள்ளார். அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டதை அடுத்து அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு விளையாட்டை முதல்வர் ஓ.பி.எஸ்., துவக்கி வைப்பதாக இருந்தது. ஆனால் ஓ.பி.எஸ்., வந்தால் அவரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். மேலும் நிரந்தர சட்டம் இயற்றும் வரை நாங்கள் போராட்டத்தை கைவிடுவதில்லை என அறிவித்துள்ளனர். இந்த கிராமத்திற்குள் யாரும் நுழைய முடியாமல் தடைகள் போடப்பட்டுள்ளது. முதல்வர் ஏமாற்றம்: இந்நிலையில் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ், நடத்திய பேச்சு தோல்வியில் முடிந்தது. இருப்பினும் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு சங்க செயலாளர் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார்.
எவ்வித சுமுக முடிவும் ஏற்படவில்லை. இதனையடுத்து மதுரையில் இருந்து முதல்வர் ஓ.பி.எஸ்., சென்னை திரும்பவுள்ளா. இன்று காலை 11. 30 மணியளவில் அவர் ரயில் மூலம் சென்னை திரும்புகிறார்.

தொடர்ந்து கலெக்டர் மற்றும் உயர் அதிகாரிகள் அலங்காநல்லூருக்கு கிளம்பி சென்றனர். இரண்டாவது கட்ட பேச்சு நடத்த திட்டமிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்