January 27, 2017

டி.டி.சி., தேர்ச்சி பெறாத பகுதி நேர ஆசிரியர்கள் விரைவில் நீக்கப்பட வாய்ப்பு?


🌺 அரசு பள்ளிகளில் நியமிக்கப்பட்ட, பகுதி நேர ஆசிரியர்களில், பயிற்சி முடிக்காதவர்களை பணி நீக்கம்செய்ய, கல்வித் துறை பரிசீலித்து வருகிறது.
தமிழக அரசு பள்ளிகளில், தொகுப்பூதிய அடிப்படையில், 2012ல், பகுதி நேர சிறப்பாசிரியர்களாக, 16 ஆயிரத்து,500 பேர் நியமிக்கப்பட்டனர்.



🌺 தையல், ஓவியம், இசை, நடனம், கணினி அறிவியல், தோட்டக்கலை உள்ளிட்ட, பல சிறப்பு பாடங்களை நடத்துகின்றனர்.இந்நிலையில், பணி நிரந்தரம் செய்யக் கோரி, பகுதி நேர ஆசிரியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

🌺 அதேநேரம், பகுதி நேர ஆசிரியர் நியமனத்தில், தகுதியில்லாதவர்கள் இருப்பதாக, குற்றச்சாட்டுகள் எழுந்தன.

🌺 அவர்களில், நுாற்றுக்கணக்கானோர், தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என, தெரிய வந்துள்ளது.

🌺 இதையடுத்து, உரிய கல்வித்தகுதி பெறாதவர்களை, பணி நீக்கம் செய்வது குறித்து, அனைவருக்கும் கல்வி இயக்க அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்