January 20, 2017

ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் விரைவில் அறிவிப்பு வெளியாகும் - தமிழக முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் அறிவிப்பு..

ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் விரைவில் அறிவிப்பு வெளியாகும்.
அவசர சட்டம் பிறப்பிப்பது குறித்து இன்று முதல்வர் முக்கிய முடிவு
சென்னை : தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வருவது தொடர்பாக, டில்லியில் ஆலோசனை நடந்ததாகவும், இன்று மாலை அதற்கான முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிகிறது. பிரதமருடன் சந்திப்பு: ஜல்லிக்கட்டுக்கு மீண்டும் அனுமதி வழங்குவது
தொடர்பாக டில்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்த தமிழக முதல்வர் பன்னீர் செல்வம், பிரதமர் கை விரித்த காரணத்தினால், டில்லியிலேயே சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதனால் பிரதமரை சந்தித்த பின் நேற்று இரவு சென்னை திரும்புவதாக வகுக்கப்பட்ட, முதல்வரின் பயணத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டது. உறுதுணை முதல்வருடனான சந்திப்பின் போது, ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளதால் மத்திய அரசு இதில் தலையிட முடியாது எனத் தெரிவித்த பிரதமர், மாநில அரசு இது தொடர்பாக எடுக்கும் நடவடிக்கைக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
முடியும்: மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல், முகுல் ரோஹத்கி, 'விளையாட்டானது மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது; ஜல்லிக்கட்டை பாரம்பரிய விளையாட்டாக கருதி, அதை நடத்த தமிழக அரசு சட்டம் கொண்டு வரலாம்' எனத் தெரிவித்தார். இதனையடுத்து ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு இன்று முக்கிய முடிவு எடுக்கும் எனத் தெரியவருகிறது. அவசர சட்டம்? இந்நிலையில் அவசர சட்டத்திற்கு தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவிடம் கையெழுத்து பெற்ற பிறகு, இன்று மாலை, 3 மணிக்கு, முதல்வர் பன்னீர் செல்வம் சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.



No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்