January 02, 2017

ஏ.இ.இ.ஓ., அலுவலகத்தில் காலிப்பணியிடம்; ஆசிரியருக்கு வழங்க தீர்மானம்!


’தமிழகத்தில் காலியாக உள்ள உதவித்தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடத்துக்கு,
அத்துறையில் பணியாற்றும் தகுதி வாய்ந்த ஆசிரியருக்கு, போட்டித்தேர்வு நடத்தி, பதவி உயர்வு வழங்க வேண்டும்’ என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயற்குழு
கூட்டம், நாமக்கல்லில் நடந்தது. மாவட்டத் தலைவர் அண்ணாமலை தலைமை வகித்தார்.

ஆறாவது ஊதியக் குழுவில், இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள கடுமையான ஊதிய பாதிப்புகளை களைந்து, தர ஊதியம் நிர்ணயம் செய்து வழங்க வேண்டும். புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதற்காக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாந்தா ஷீலா நாயர் தலைமையில் அமைக்கப்பட்ட வல்லுனர் குழுவின் அறிக்கையை வெளியிட வேண்டும்.

புதிய தேசியக் கல்விக் கொள்கை - 2016ல், மாணவர் மற்றும் ஆசிரியர் நலன்களுக்கு எதிராக காணப்படும் சரத்துக்களை நீக்க வேண்டும். பட்டதாரி ஆசிரியர்களுக்கான பயிற்சிகளுக்கு, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களை கருத்தாளர்களாக நியமிக்க வேண்டும்.
தமிழகத்தில் காலியாக உள்ள உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு, தற்போது அத்துறையில் பணியாற்றும் தகுதி வாய்ந்த ஆசிரியருக்கு, போட்டித்தேர்வு நடத்தி, பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்