January 02, 2017

மார்ச் மாதத்துக்குள் உள்ளாட்சி தேர்தல்; தேர்தல் ஆணையத்துக்கு ராமதாஸ் வலியுறுத்தல்


சென்னை - பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஐகோர்ட் நீதிபதியின் வழிகாட்டுதல்படி டிசம்பருக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடித்திருக்கலாம். ஆனால், செயல்படாத அரசு உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை நீட்டித்திருக்கிறது.தமிழகம் முழுவதும் கடுமையான வறட்சி வாட்டத்
தொடங்கியுள்ள நிலையில், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இருந்தால் குடிநீர் பஞ்சம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு விரைவாகத் தீர்வு காண முடியும்.

உள்ளாட்சி அமைப்புகள் பொதுமக்களின் தேவைகளை அவர்களே நிறைவேற்றிக் கொள்வதற்காக உருவாக்கப்பட்டனவே தவிர, அதிகாரிகள் ஆட்சி செய்ய ஏற்படுத்தப்படவில்லை. இதை உணர்ந்து மார்ச் மாதத்திற்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி, மாநிலத் தேர்தல் ஆணையம் ஆட்சியாளர்களின் தலையீடின்றி செயல்பட வசதியாக அவற்றை இந்திய தேர்தல் ஆணையத்துடன் தமிழக அரசு இணைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்