January 17, 2017

ATM இல் 3 முறைக்கு மேல் பணம் எடுக்க முடியாது - மத்திய அரசின் புது சட்டம்...!


ATM இல் 3 முறைக்கு மேல் பணம் எடுக்க முடியாது - மத்திய அரசின் புது சட்டம்...!
ஏ டி எம் மில் . மாதம் 5 முறை இலவசமாக பணம் எடுக்க முடியும். மேலும், பிற வங்கி ஏ டி எம்மிலிருந்து பணம் எடுக்க மாநகரங்களில் இருப்பவர்கள் 3 முறையும், மற்ற இடங்களில் உள்ளவர்கள் 5 முறையும் இலவசமாக பணம் எடுக்க முடியும். ஒருவேளை அதற்குமேல் எடுத்தால் அதற்கான
கட்டணம் ரூபாய் 20 வசூலித்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது ரூபாய் நோட்டு செல்லாது என பிரதமர் அறிவித்த பின்பு, பலரும் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாறிவிட்டனர். இருந்தபோதிலும் அனைவராலும் ஒரு குறிபிட்ட சில நாட்களிலேயே டிஜிட்டல் பரிவர்தனைக்கு மாற முடியுமா என்றால் , நிச்சயம் முடியாது .

பெரும்பாலான மக்கள், ரொக்க பரிவர்த்தனைக்கே அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், ரொக்க பரிவர்த்தனையை குறைக்க , ஏ டி எம் களில் பணம் எடுபதற்கான எண்ணிகையை வெகுவாக குறைத்தால், மக்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாறுவார்கள் என ஆலோசிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாதத்திற்கு மூன்று முறை மட்டுமே ஏடிஎம் இல் பணம் எடுக்க முடியும், அதற்கு மேல் எடுத்தால் அதற்கான கட்டணத்தை நம் வங்கி கணக்கில் இருந்த பெறப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது. இது குறித்த முக்கிய அறிவிப்பு அடுத்த மாத பட்ஜெட்டில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்