ஏர்டெல் 4G சேவைகளுக்கு மாறும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ஒரு வருடத்திற்கு இலவச 4G டேட்டா வழங்க இருப்பதாக ஏர்டெல் அறிவித்துள்ளது.
புதுடெல்லி:
பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய டேட்டா திட்டங்களை அறிவித்துள்ளது. அதன் படி ஏர்டெல் 4G சேவைகளுக்கு மாறும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ரூ.9,000 மதிப்புள்ள சேவைகள் ஒரு வருடத்திற்கு இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய 12 மாத சலுகை தற்சமயம் ஏர்டெல் நெட்வொர்க் பயன்படுத்தாத அனைத்து 4G ஸ்மார்ட்போன் பயனர்களுக்கும் வழங்கப்படுகிறது. ஏற்கனவே ஏர்டெல் சேவையை பயன்படுத்துவோர், புதிய 4G ஸ்மார்ட்போன் வாங்கும் போது இந்த சலுகையை பெற முடியும்.
ஏர்டெல் புதிய சலுகையின் படி வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 3GB அளவு டேட்டா டிசம்பர் 31, 2017 வரை தேர்வு செய்யப்பட்ட பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் திட்டங்களுக்கு வழங்கப்படுகிறது. இன்று முதல் கிடைக்கும் இந்த சலுகை பிப்ரவரி 28, 2017 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோவின் இலவச 4G திட்டங்களுக்கு பதிலடி கொடுக்கும் நோக்கில் பல்வேறு தொலைதொடர்பு நிறுவனங்களும் இலவச டேட்டா, புதிய சலுகை உள்ளிட்டவற்றை அறிவித்து வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக ஏர்டெல் சார்பில் இந்த சலுகை வழங்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
நன்றி..மாலைமலா்...
No comments:
Post a Comment
குறிப்பு
1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்விக் கதிர்