January 19, 2017

மலிவு விலை ஜியோ 4ஜி போன் புகைப்படம் வெளியீடு..

மலிவு விலை ஜியோ 4ஜி போன் புகைப்படம் கசிந்தது



ரிலையன்ஸ் ஜியோ 4ஜி வோல்ட்இ தொழில்நுட்பம் கொண்ட பீச்சர் போன்களின் விலை ரூ.999 மற்றும் ரூ.1500 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்பட்டது. இந்நிலையில் இந்த ஸ்மார்ட்போனின் புகைப்படம் இணையத்தில் கசிந்துள்ளது. 

இணையத்தில் கசிந்திருக்கும் ரிலையன்ஸ் ஜியோ வோல்ட்இ பீச்சர் போனின் புகைப்படத்தில் எவ்வித தகவலும் இல்லை. இப்புகைப்படத்தில் ஜியோ பீச்சர் போனில் நான்கு பட்டன்கள் டிஸ்ப்ளேவின் கீழ் வழங்கப்பட்டுள்ளது. இவை இடது முதல் வலது புறம் வரை மைஜியோ, ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ மியூசிக் செயலிகளுக்கான பட்டன்கள் வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக வெளியான தகவல்களில் ரிலையன்ஸ் ஜியோ 4ஜி வோல்ட்இ பீச்சர் போன்களில் ஸ்ப்ரெட்ரம் சிப்செட் வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. இதோடு குவால்காம் மற்றும் மீடியாடெக் உள்ளிட்ட நிறுவனங்களுடனும் குறைந்த விலை சிப்செட்களை உருவாக்குவது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்பட்டது. 
மேலும் இதற்கு முன் வெளியான தகவல்களில் ரிலையன்ஸ் ஜியோ பீச்சர் போனில் பிரைமரி மற்றும் செல்ஃபி கேமரா உள்ளிட்டவை வழங்கப்படும் என கூறப்பட்டது. எனினும் தற்சமயம் வெளியாகியிருக்கும் புகைப்படங்களில் செல்ஃபி கேமரா இடம் பெறவில்லை என்பது தெரியவந்துள்ளது. இத்துடன் ரிலையன்ஸ் ஜியோ 4ஜி வோல்ட்இ தொழில்நுட்பம் கொண்ட இரண்டு பீச்சர் போன்கள் தயாரிக்கப்படுவதாக கூறப்படுகிறது.   


ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவைகளின் வரவு இந்திய தொலைதொடர்பு சந்தையில் மற்ற நிறுவனங்களையும் தங்களின் விலை பட்டியலை மாற்றியமைக்க வைத்துள்ளது. கடந்த சில மாதங்களில் பாரதி ஏர்டெல், வோடபோன், ஐடியா என போட்டி நிறுவனங்கள் தொடர்ந்து தங்களின் டேட்டா கட்டணங்களை மாற்றியமைத்து வருகின்றன.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்