January 25, 2017

+2 தனித் தேர்வர்களுக்கு புதன் முதல் ஹால்டிக்கெட்.


பிளஸ் 2 தனித் தேர்வர்கள் ஹால்டிக்கெட்டை புதன்கிழமை முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறி்ப்பு:'வரும் மார்ச், ஏப்ரல் மாதத்தில் நடைபெறவுள்ள பிளஸ் 2
பொதுத்தேர்வுக்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை (ஹால் டிக்கெட்) 25-ம் தேதி(புதன்கிழமை) முதல் 29-ம் தேதி வரை அரசு தேர்வுத் துறையின் இணையதளத்தில் (www.dge.tn.gov.in) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

ஹால் டிக்கெட் பிரிண்ட் அவுட் என குறிப்பிடப்பட்டிருக்கும் பகுதியை கிளிக் செய்துவிட்டுவிண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவுசெய்தால் போதும்.மொழிப் பாடங்களில் கேட்டல், பேசுதல் திறன் தேர்வு, சிறப்பு மொழி (தமிழ்) பாடத்தில் கேட்டல், பேசுதல் திறன் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வுக்கான தேதி குறித்த விவரத்தைத் தனித்தேர்வர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தின் முதன்மைக் கண்காணிப்பாளரை அணுகி அறிந்து கொள்ள வேண்டும்' என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்