💳 பண மதிப்பு நீக்கத்துக்கு பிறகு டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகமாக நடந்து வருகிறது.
💷 அதனால் வரும் 2020-ம் ஆண்டில் டெபிட், கிரெடிட் கார்ட் மற்றும் பாயின்ட் ஆப் சேல் இயந்திரங்களுக்கான தேவை இருக்காது என நிதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த் தெரிவித்தார்.
💴 பெங்களூருவில் நடந்த வெளிநாடு வாழ் இந்தியர்களுக் கான நிகழ்ச்சியில் பேசும் போது இவ்வாறு கூறினார்.
🔶 மேலும் அவர் கூறியதாவது:
💶 இந்தியா தொழில் நுட்பத்தை பயன்படுத்தவதில் பல துறைகளில் புதுமைகளை படைத்துவருகிறது. நிதிச்சேவைகள் மட்டுமல்லாமல், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட இதர துறைகளிலும் புதுமைகளை படைத்து வருகிறோம்.
💵 என்னுடைய கணிப்புபடி வரும் 2020 - ஆம் ஆண்டில் டெபிட், கிரெடிட் கார்டு மற்றும் பாயின்ட் ஆப் சேல் எந்திரங்களுக்கு தேவையே இருக்காது.
💷 மத்திய அரசு மிகப்பெரிய அளவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவித்து வருவதால் அடுத்த மூன்று ஆண்டுகளில் மிகப்பெரிய மாற்றம் நடக்கும் என்று கூறினார்.

No comments:
Post a Comment
குறிப்பு
1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்விக் கதிர்