January 01, 2017

பிறந்தது 2017 - நாடு முழுவதும் கொண்டாட்டம்..


2017ம் ஆண்டை வரவேற்று நாடு முழுவதும் மக்கள் கோலாகலமாக கொண்டாடினர். புத்தாண்டையொட்டி ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். அரசியல் தலைவர்கள், திரை நட்சத்திரங்கள் உள்பட பலர் புத்தாண்டை வரவேற்று பொதுமக்களுக்கு வாழ்த்து
தெரிவித்துள்ளனர்.

சென்னை மெரீனா கடற்கரையில் நள்ளிரவில் இளைஞர்கள் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
இதேபோல் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை, கிழக்கு கடற்கரை சாலையில் இளைஞர்கள் ஆடல், பாடல்களுடன் கொண்டாடினர். பொது இடங்கள், வணிக வளாகங்கள், நட்சத்திர ஓட்டல்களிலும் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது.
இதேபோல் தமிழகத்தின் பிற நகரங்களிலும், புதுச்சேரியிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைக்கட்டியது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்