January 24, 2017

தமிழகத்தில் 15 ஆயிரம் போலீசார் தேர்வு..


தமிழக காவல் துறையில் 15,711 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைக் குழுமம் வெளியிட்டுள்ளது. இதற்கான எழுத்துத்தேர்வு வரும் மே 21ம் தேதி நடக்கிறது.

காலியிட விவரம்:இரண்டாம்நிலை காவலர் (தமிழ்நாடு சிறப்பு காவல்படை) 4615 இடங்களும், இரண்டாம்நிலை காவலர்(ஆயுதப்படை) பிரிவில் 8568 இடங்களும், இரண்டாம்நிலை சிறை காவலர் 1016 இடங்களும், தீயணைப்போர் 1512 இடங்களும் என மொத்தம் 15,711 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

கல்வித்தகுதி :பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 10ம் வகுப்பில் தமிழை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும். தமிழ் மொழியில் படித்தவர்களுக்கு 20 சதவீதம் முன்னுரிமை அளிக்கப்படும்.

வயது: 2017 ஜூலை 1 அடிப்படையில் 18 வயது முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும். அதாவது 1993 ஜூலை 1க்கு பின்னரும், 1999 ஜூலை 1 க்கு முன்பும் பிறந்தவராக இருக்க வேண்டும். இதிலிருந்து பி.சி, எம்.பி.சி., எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினருக்கு வயது சலுகை உண்டு.உடல்கூறு அளவுகள்: உயரம் குறைந்த அளவு 170 செ.மீ., (எஸ்.சி.,/எஸ்.டி., 167 செ.மீ.,) இருக்க வேண்டும். மார்பளவு குறைந்தபட்சம் 81 செ.மீ., மார்பு விரிவாக்கம் குறைந்த 5 செ.மீ., இருக்க வேண்டும். பெண்கள் உயரம் 159 செ.மீ., (எஸ்.சி.,/எஸ்.டி., 157 செ.மீ.,)இருக்கவேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்:தேர்வு செய்யப் பட்ட 284 அஞ்சல் நிலையங்களில், ரூ.30 செலுத்தி விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். தேர்வுக்கட்டணம் ரூ. 135.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பிப். 22ம் தேதி மாலை 5.45 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

மதிப்பெண் விவரம்: மொத்த மதிப்பெண்கள் 100 ( எழுத்துத்தேர்வுக்கு 80 மதிப்பெண்கள், உடல்திறன் போட்டிக்கு 15 மதிப்பெண்கள்,என்.சி.சி., போன்ற சான்றிதழ்களுக்கு 5 மதிப்பெண்கள்)

தேர்ச்சி முறை: முதலில் எழுத்து தேர்வு நடத்தப்படுகிறது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு உடல் திறன் போட்டி, பின் மருத்துவ பரிசோதனை ஆகியவை மூலம் தேர்வு செய்யப்படுவர்.

முழு விவரங்களுக்கு:http://www.tnusrb.tn.gov.in/

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்