January 04, 2017

10, 12 வகுப்பு - துணைத்தேர்வு எழுதியோருக்கு இன்றுமுதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

📝 2016 செப்டம்பர் /  அக்டோபரில், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வு எழுதியோருக்கு, இன்று, அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது.



📚 இது குறித்து, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

📖 அக்டோபரில், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு துணைத்தேர்வு எழுதியோர், நவ., 3 முதல், தற்காலிக மதிப்பெண் சான்றிதழை,
அவர்களே, ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது.

📖 மார்ச் மற்றும் ஜூனில் நடந்த தேர்வுகளில், தேர்ச்சி பெறாதோர், அக்டோபர் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பர். அவர்களுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட அசல் மதிப்பெண் சான்றிதழும், மற்றவர்களுக்கு, அசல் மதிப்பெண் சான்றிதழும் வழங்கப்படும்.

📖 சான்றிதழை, இன்று முதல் தேர்வு மையத்தில் பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்