December 25, 2016

NMMS தேர்வுக்கு விடுமுறை நாட்களிலும் இலவச பயிற்சி அளிக்கும் அரியலூர் மாவட்ட அரசு பள்ளி ஆசிரியர்கள்


அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியத்தில் 19 நடுநிலைப்பள்ளிகளில் 8-ஆம் வகுப்பில் பயிலும் 70 மாணவ,மாணவிகளை தேர்வு செய்து அவர்களுக்கு வார இறுதி விடுமுறை நாட்களில் அரசு நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களால் பயிற்சியளிக்கப்படுகிறது. 


இப்பயிற்சியை ஒருங்கிணைத்து தேவைப்படும் இடத்தில் நிதியுதவியும் செய்து நடத்தும் ஆசிரியர் திரு.ர.ஜாபர்சாதிக் அவர்களுக்கும்,வினாக்களை தட்டச்சி செய்து தந்து உதவும் ஆசிரியர் திரு.குமரவேல் அவர்களுக்கும், மேலும் மாணவர்களுக்கு பயிற்சியளித்து வரும் ஆசிரியர்களான திரு.மணிகண்டன் திரு.தமிழ்வேல், திரு.பாலகிருஷ்ணன். ஆசிரியைகளான திருமதி .பூங்கொடி, திருமதி.சிவசக்தி, திருமதி.சிவானந்த விஜயலெட்சுமி, திருமதி.விஜயா மற்றும் திருமதி.சிவகாமி போன்ற ஆசிரிய, ஆசிரியைகளுக்கு மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுதலையும் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் மாணவர்களுக்கு பரிசுகள், தேனீர்,பிஸ்கட்கள், வினா மற்றும் விடைத்தாள்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் போன்றவைகளுக்கு நிதியுதவி அளித்துவரும் ஆசிரியர்களுக்கும் நன்றி கலந்த பாராட்டுகள்.

நன்றி: திரு.மணிகண்டன் அவர்கள்
அறிவியல் பட்டதாரி ஆசிரியர்
செந்துறை block

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்