December 26, 2016

பணம் இல்லாமல் காசோலை திரும்பி வந்தால் கடும் தண்டனை: விரைவில் புதிய சட்டத்திருத்தம் - மத்திய அரசின் அடுத்த அதிரடி.

💶 காசோலை மோசடி செய்து வருபவர்களுக்கு தண்டனை வழங்கும் விதமாக மத்திய அரசு விரைவில் புதிய சட்டத்திருத்தம் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.



💵 வங்கி கணக்கில் பணம் இல்லாமல் காசோலை திரும்பி வந்தால் இரு ஆண்டுகள் சிறை அல்லது இரு மடங்கு அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என தகவல்கள் தெரிய வந்துள்ளது.

💷 இது தொடர்பாக காசோலை மோசடி சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

💶 காசோலை பரிவர்த்தனைகளில் பெருமளவு மோசடி நடைபெறுகிறது.

💴 அதை உரிய முறையில் பயன்படுத்த முடியாத நிலை நீடிக்கிறது’ என வியாபாரிகள் மத்திய அரசிடம் தெரிவித்துள்ளனர்.

💷 மேலும் காசோலை மோசடியால் பாதிக்கப்பட்டோர் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்து பணம் வாங்குவதும் கடினமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

💵 அரசின் திட்டப்படி ரொக்கமில்லா பரிவர்த்தனையை கையாள வசதியாக காசோலை பயன்பாட்டினை ஊக்குவிக்க வேண்டும்.

🔷 இது குறித்து உயரதிகாரி கூறுகையில்:

💶 காசோலை மோசடி வழக்குகளில் சிக்குவோருக்கு கடும் தண்டனை விதிக்கும் வகையிலான பல்வேறு திட்டங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இது தொடர்பான முடிவு விரைவில் எடுக்கப்படும்.

💴 ரொக்கமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் இத்தகைய கடுமையான விதிகளை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது இவ்வாறு அவர் கூறினார்.

💷 இந்த புதிய சட்டத் திருத்தத்தை வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரியவந்துள்ளது.

💵 மேலும் இந்தியாவில் 18 லட்சத்திற்கு மேற்பட்ட காசோலை மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளது.

💶 இதில் 38,000 வழக்குகள் உயர்நீதிமன்றங்களில் உள்ளது.

💴 இதில் பெரும்பாலான வழக்குகள் 5 வருடங்களுக்கு மேலாக நிலுவையில் இருப்பவை.

💷 மஹாராஷ்டிரா, குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் தான் அதிக அளவில் வழக்குகள் பதிவாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்