மதுரை: ரத்து செய்யப்பட்ட உள்ளாட்சி தேர்தல், அடுத்த ஆண்டு ஏப்ரலில் நடக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.'தமிழகத்தில் 12 மாநகராட்சிகள், 123 நகராட்சிகள், 529 பேரூராட்சிகள், 385 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 12 ஆயிரத்து 254 ஊராட்சிகளுக்கான தேர்தல் அக்., 17, 19ல் நடக்கும்' என செப்., 25ல் அறிவிக்கப்பட்டது.
இவர்களது பதவி காலத்தை நீடிப்பது குறித்து, அரசு இதுவரை எந்த முடிவும் செய்யவில்லை.மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் அருந்ததியினருக்கான இடஒதுக்கீடு பணிகள் துவங்கவில்லை. இடஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிட்டு, உயர்நீதிமன்றத்திற்கு அரசு தெரிவிக்க வேண்டும்.
'ஜனவரியில் பொங்கல், மார்ச்சில் அரசு பொது தேர்வுகள் வருவதால், ஏப்ரலுக்கு உள்ளாட்சி தேர்தல் தள்ளி போகும் வாய்ப்பு உள்ளது' என அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
குறிப்பு
1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்விக் கதிர்