December 30, 2016

அரசு பள்ளிகளில் தகுதியில்லாத பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம்: தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மோசடி அம்பலம் !!


ஆசிரியர் பயிற்சி முடிக்காத 2000-க்கு மேற்பட்டோர் அரசு பள்ளிகளில் பகுதி நேர ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக மோசடி தெரியவந்துள்ளது. ஆசிரியர் பயிற்சி முடிக்காதவர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் பணி  நியமன ஆணை வழங்கி உள்ளது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ்

தெரியவந்துள்ளது. கோவையில் தேவராயபுரம் அரசு உயர்நிலை பள்ளி, வால்பாறை சோலையார் டேம் அரசு மேல்நிலை பள்ளி, கோட்டூர் அரசு மேல்நிலை பள்ளி மற்றும் திருநெல்வேலியில் உள்ள அரசு பள்ளி உள்ளிட்ட பல பள்ளிகளில் ஆசிரியர் பயிற்சி முடிக்காதவர்கள் பகுதி நேர ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளது இதில் தெரியவந்துள்ளது. இது குறித்து தமிழக அரசு உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

 கடந்த 2016-ம் ஆண்டு அரசு நடுநிலை பள்ளிகளில் தையல், இசை, ஓவியம் உள்ளிட்ட 8 பிரிவு கலைப்பாடங்களுக்கு 16,549 பேர் பகுதி நேர ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். இந்த நியமனத்தில் தான் மோசடி நடந்து உள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் உள்ள 32 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம் இருந்து தகவல்கள் முழுமையாக கிடைத்த பின்னர் நீதிமன்றத்தில் ராஜ்குமார் வழக்கு தொடர போவதாக தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்