December 09, 2016

பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் விரைவில் அறிமுகம் : மத்திய அரசு அறிவிப்பு


டெல்லி, டிச.09 (டி.என்.எஸ்) கடந்த நவம்பர் 8 ஆம் தேதி பழைய ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த மத்திய அரசு, அதற்கு பதிலாக புதிய 2000, 500 ரூபாய் நோட்டுகளை வெளிட்டது.
பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாமல் போனதால் மக்களிடம் பண தட்டுப்பாடும், புதிய ரூபாய் நோட்டுக்களால் சில்லரை தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. தற்போது வங்கிகளிலும், ஏடிஎம் மையங்களிலும் மக்கள்
பணத்திற்காக வரிசையில் காத்துக் கொண்டிருக்கும் நிலையே நீடித்து வருகிறது.
இதற்கிடையில், நேரடி பண பரிவர்த்தனை அல்லாமல், டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு மக்கள் மாற வேண்டும், என்று வலியுறுத்திய பிரதமர் மோடி, அதற்காக பல சலுகைகளையும் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், பழைய ரூபாய் நோட்டுகள் குறித்து நேற்று மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு நிதித்துறை இணை அமைச்சர் அர்ஜுன் சிங் மேக்வால், எழுத்து மூலமாக அளித்த பதிலில், பிளாஸ்டிக் மற்றும் பாலிமர் ரூபாய் நோட்டுகள் விரைவில் அறிமுகப்படுத்த இருப்பதாக, தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:
நாட்டில் புழக்கத்தில் உள்ள காகித ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அல்ல பாலிமர் ரூபாய் நோட்டுகளை கொண்டு வர மத்தியஅரசு முடிவு செய்துள்ளது. இதற்கான மூலப்பொருட்களை கொள்முதல் செய்யும் பணிகள் தொடங்கிவிட்டன.
காகித ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக, பிளாஸ்டிக் கரன்சிகளை அறிமுகப்படுத்த நீண்ட காலமாகவே ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், ரூ.10 மதிப்பில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் 10 லட்சம் எண்ணிக்கையில் அச்சடித்து வெளியிடப்படும். இந்த ரூபாய் நோட்டுகள் சோதனை முயற்சியாக கொச்சி, மைசூர், ஜெய்ப்பூர், சிம்லா, மற்றும் புவனேஷ்வர் ஆகிய நகரங்களில் அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
பிளாஸ்டிக் கரசன்சியின் சராசரி ஆயுள் காலம் 5ஆண்டுகளாகாகும். இதை கள்ளநோட்டுகளாக அச்சடிப்பது கடினமாகும். இதை கசக்க முடியாது, அழுக்குப்படியாமல் சுத்தமாக வைத்திருக்க முடியும். இதற்கு முன் இந்த நோட்டுகள் ஆஸ்திரேலியாவில் முதன் முதலாக அறிமுகம் செய்யப்பட்டது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்