December 04, 2016

அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு..

அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி..
தமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு..


☔ தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
⚡தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டியுள்ள வடக்கு சுமத்ரா தீவுப்பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது‌.

💧அடுத்து வரும் 24 மணி நேரத்தில் அது காற்றழுத்த தாழ்வு மண்டல‌மாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

⚡இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவையில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக ‌சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

💧சென்னையை பொருத்தவரை நகரின் சில பகுதிகளில் விட்டு விட்டு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

⚡ கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிவகிரியில் 6 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்