December 27, 2016

இ-சேவை மையங்களில் இனி 20 வகையான சான்றிதழ்களை பெறும் வசதி - விரைவில் அறிமுகம்.

🔶 இ-சேவையில் இனி 4+16=20 வகையான சான்றுகளை வழங்க ஏற்பாடு: VAO களுக்கு வருவாய்த்துறை பயிற்சி !!

🔷 மத்திய, மாநில அரசின் சலுகைகளைப் பெற, வருவாய்துறையின் சான்றுகள் அவசியம்.

🔶 கல்வி, வருவாய், வசிப்பிடம், சார்ந்தோர், வருவாய், சொந்த இடம் உள்ளிட்ட தனிநபர் பின்புலம் உள்பட
பல்வேறு அம்சங்கள் தொடர்பாக, விசாரணை நடத்தி அதன்பின் இவை வழங்கப்படுகின்றன.

🔷 இச்சூழலில், சில மாதங்களுக்கு முன், வருவாய்துறை சார்ந்த சான்றுகளை பெற, இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கும் முறை அறிமுகமானது.


1) இருப்பிடம்,
2) பிறப்பிடம்,
3) சாதி,
4) முதல் தலைமுறை பட்டதாரி குடும்பம்

 உள்ளிட்ட 4 சான்றுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

🔶 மாவட்ட இ-சேவை மையங்கள் மட்டுமின்றி தாலுகா, கூட்டுறவு கடன் சங்கங்களிலும் இ-சேவை மையங்கள் செயல்படுகின்றன.

🔷 இந்நிலையில், மேலும் 16 வகையான சான்றுகள் இப்பட்டியலில் இணைக்கப்பட உள்ளன.

📢 இது பற்றி வருவாய்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

🔶 ஏற்கனவே 4 வகையான சான்றுகள் வழங்கப்படுகின்றன.

💻 தற்போது
  5) விவசாய வருவாய்,
  6)சிறு விவசாயி,
  7)குறு விவசாயி,
  8) இதர பிற்பட்டோர்,
  9) வாரிசு,
10) இடம்பெயர்வு, சான்றிதழ்
11) மீளப்பெறமுடியாமை சான்று,
12) கணவரால் கைவிடப்பட்ட பெண்,
13) சொத்து மதிப்பு,
14) ஆண் வாரிசு இல்லாதது,
15) பணியில் இல்லை,
16) 'பான்' தரகர் உரிமம்,
17) மணி லெண்டர் உரிமம்,
18) திருமணமாகாதவர்,
19) விதவை,
20) கலப்பு திருமணம்

ஆகியவற்றிற்கான சான்றுகளும் இப்பட்டியலில் இணைக்கப்பட உள்ளன.

🔷 இந்த சான்றிதழ்களில் முறைகேடுகளை தவிர்க்க, விண்ணப்பதாரரின் போட்டோவுடன் சான்றுகள் வழங்கப்படும், என்றார்.

🔶 இச்சேவை, அடுத்த மாதத்தில் (ஜனவரி, 2017) இருந்து துவங்கப்பட உள்ளது.

🔷 இதற்காக (VAO) கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என்றார்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்