December 31, 2016

பிப்ரவரி முதல் வாரத்தில் பிளஸ் 2, 10ம் வகுப்புக்கு செய்முறைத் தேர்வு


பிளஸ் 2 தேர்வு மார்ச் 2ம் தேதியும், பத்தாம் வகுப்பு தேர்வு மார்ச் 8ம் தேதியும் தொடங்க உள்ளன. பள்ளிகள் மூலம் சுமார் 20 லட்சம் மாணவ, மாணவியர் மேற்கண்ட தேர்வுகளை எழுத உள்ளனர். பிளஸ் 2 வகுப்பில் அறிவியல் பாடப் பிரிவுகளை எடுத்து படிக்கும் மாணவர்கள் கண்டிப்பாக செய்முறைத் தேர்வு எழுத வேண்டும். இத்தேர்வுக்கு 50
மதிப்பெண்கள் வழங்கப்படும்.

பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அனைவரும் அறிவியல் பாடத்தில் செய்முறைத் தேர்வு எழுத வேண்டும். வரும் மார்ச் மாதம் பொதுத் தேர்வுகள் தொடங்க உள்ளதால் முன்னதாக செய்முறைத் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என்று தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.

இதையடுத்து, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. செய்முறைத் தேர்வுகள் நடத்துவது தொடர்பான ஆய்வுக் கூட்டம் அடுத்த வாரம் சென்னையில் நடக்க உள்ளது. இதில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கலந்து கொள்வார்கள். பிளஸ் 2 வகுப்பு செய்முறைத் தேர்வுகள் காலையிலும், பத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் மாலையிலும் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

அறிவியல் பிரிவில் மாணவர்கள் எடுத்துள்ள விருப்ப பாடங்களின்படி மாணவர்கள் குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு நாளும் ஒரு குழு வீதம் செய்முறைத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். அதேபோல, பத்தாம் வகுப்பு மாணவர்கள் மதியத்துக்கு பிறகு குழுக்களாக அனுமதிக்கப்படுவார்கள். அதன்படி, செய்முறைத் தேர்வுகளை வரும் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் தொடங்கி 25ம் தேதிக்குள் முடிக்க தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. ஆய்வுக் கூட்டத்துக்கு பிறகு செய்முறைத் தேர்வுக்கான அட்டவணை மாவட்ட வாரியாக வெளியிடப்படும்..

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்