December 14, 2016

குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் ஏராளமானோர் தவிப்பு: டிஎன்பிஎஸ்சி கால அவகாசம் வழங்க கோரிக்கை


இணையதள சேவை பாதிப்பால் குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்  (டிஎன்பிஎஸ்சி) குரூப் 1 பதவியில் அடங்கிய 85 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வை பிப்ரவரி 19ம் தேதி நடத்துகிறது. 


இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க  டிசம்பர் 12ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வர்தா புயல் தாக்க தொடங்கியது. இது, நேற்று முன்தினம் 3 மாவட்டங்களை துவம்சம்  செய்தது. இதனால் செல்போன் சேவை, இணையதள சேவை உள்ளிட்ட அனைத்து சேவைகளும் முடங்கியது.

ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. அது மட்டுமின்றி, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இணையதளம் சேவை துண்டிப்பால்  குரூப் 1 தேர்வுக்கு 2 நாட்கள் விண்ணப்பிக்க முடியாமல் போனது. ஆயிரக்கணக்கானவர்கள் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தேர்வுக்கு  விண்ணப்பிக்கும் தேதியை டிஎன்பிஎஸ்சி நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. ஆனால், டிஎன்பிஎஸ்சியில் இருந்து எந்தவித அறிவிப்பும் வராததால்  தேர்வர்கள் குழப்பத்தில் உள்ளனர்

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்