December 03, 2016

இளநிலை உதவியாளர் பணி டிச., 11ல் எழுத்து தேர்வு.


தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தில், இளநிலை உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்தோருக்கு, வரும், 11ல், எழுத்துத்தேர்வு நடைபெற உள்ளது. தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தில், காலியாக உள்ள, 75 இளநிலை உதவியாளர், உதவி சேமிப்புக் கிடங்கு அலுவலர் பணி இடங்கள், நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கு விண்ணப்பித்தோரில், தகுதி வாய்ந்த, 3,073 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு, வரும், 11ல், சென்னை, முகப்பேர் மேற்கில் உள்ள, வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், எழுத்துத்தேர்வு நடைபெற உள்ளது. அழைப்புக் கடிதம், பதிவு தபாலில் அனுப்பப்பட்டு உள்ளது. மேலும் விபரங்களை, www.tnwc.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்; 044 - 2230 2300 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்