December 29, 2016

பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற அரசு பள்ளிகள் தீவிரம்!


தமிழகத்தில், வரும் மார்ச் மாதம், பிளஸ் 2 மாணவர்களுக்கான அரசு பொதுத்தேர்வு துவங்குகிறது. நாமக்கல்லில் உள்ள அரசு
பள்ளிகளில், மாணவர் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆண்டு தோறும் நடக்கும் பொதுத்தேர்வில், தனியார் பள்ளிகளே, மாநில முதலிடம் பெற்று சாதனை படைக்கின்றன. அரசு பள்ளியும் சாதனை படைக்க வேண்டும் என்பதே பெற்றோரின் எண்ணம். இந்த ஆண்டு, மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில், 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக, தலைமையாசிரியர்கள், சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர்கள் பெரும் முயற்சி எடுத்து வருகின்றனர். இதுகுறித்து, தலைமையாசிரியர் ஒருவர் கூறியதாவது:

 கடந்த ஆண்டு, அரசு பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது. இந்த ஆண்டு, 100 சதவீதம் தேர்ச்சியை எட்டும் வகையில், நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்டத்தில், 166 அரசு பள்ளிகள் உள்பட, தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள், 29 ஆயிரத்து, 831 பேர் பிளஸ் 2 தேர்வும், 23 ஆயிரத்து, 721 பேர் எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வும் எழுதுகின்றனர். அரசு பள்ளி மாணவர்கள், 100 சதவீதம் தேர்ச்சி பெறுவதற்காக, அனைத்து ஆசிரியர்களும் முழு ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்துள்ளனர். முக்கிய வினா-விடைகள் அடங்கிய கற்றல் கையேடு வழங்கப்பட்டுள்ளது. ஜன., 6ல், முதல் திருப்புத்தேர்வு துவங்குகிறது. அதில், தோல்வி அடையும் மாணவர்களுக்கு, சிறப்பு கவனம் செலுத்தி, தேர்வில் வெற்றி பெறுவதற்கான அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்