December 02, 2016

நாளை மறுநாள் (04.12.2016) வங்ககடலில் புதிய காற்றழுத்தம் உருவாகிறது - இந்திய வானிலை மையம் தகவல்.

நாளை மறுநாள் (04.12.2016)  வங்ககடலில் புதிய காற்றழுத்தம் உருவாகிறது - இந்திய வானிலை மையம் தகவல்.
 


☔ தென்மேற்கு வங்ககடலில் இலங்கைக்கு அருகே உருவான காற்றழுத்த தாழ்வு நிலை நாடா புயலாக மாறியது.

💧அது திடீர் என்று வலுவிழந்து மீண்டும் காற்றழுத்த மண்டலமாக மாறி இன்று அதிகாலை காரைக்கால் அருகே கரையை கடந்தது.

⚡கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வு நிலைகள் உருவாகி சென்னை,கடலூர் மழை கொட்டி கடும் சேதத்தை ஏற்படுத்தியது.

☔ இதனால் நடா புயல் அச்சத்தை ஏற்படுத்தியது.

💧ஆனால் திடீர் என்று வலுவிழந்ததால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.

⚡ இந்த நிலையில் தென்கிழக்கு வங்ககடலில் அந்தமானுக்கு தெற்கே வருகிற 4-ந் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் வாய்ப்பு இருப்பதாக டெல்லியில் உள்ள இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

☔ இந்த காற்றழுத்த தாழ்வு நிலை தீவிரம் அடையுமா? எந்த திசை நோக்கி நகரும் என்பது குறித்து வானிலை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்