November 04, 2016

தொலைதூரக்கல்வி படிப்பு விவரங்களை கல்விச்சான்றிதழ்களில் குறிப்பிட வேண்டும் - UGC.

🎓 தொலைதூரக்கல்வி படிப்பு விவரங்களை கண்டிப்பாக கல்விச் சான்றிதழ்களில் குறிப்பிட வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு (UGC) தொலைதூரக்கல்வி நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.


📋 கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்துக்கு நேரில் சென்று படிக்க இயலாதவர்கள் மேற்படிப்பை தொடர உதவும் வகையில் தொலைதூரக்கல்வி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

📝 கிட்டதட்ட அனைத்து பல்கலைக்கழகங்களுமே தொலைதூரக்கல்வி திட்டத்தில் பட்டப் படிப்புகள், பட்டமேற்படிப்புகள், டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளை வழங்கி வருகின்றன.

🎓 தொலைதூரக்கல்வியில் படித்து பட்டம் பெறுவோருக்கு வழங்கப்படும் சான்றிதழ்களில் ஒருசில பல்கலைக்கழகங்கள் தொலைதூரக்கல்வி படிப்பு விவரத்தை குறிப்பிடுவதில்லை என பல்கலைக்கழக மானியக்குழுவுக்கு (UGC) புகார்கள் வரப்பெற்றன.

📝 இந்த நிலையில், UGC செயலாளர் ஜஸ்பால் எஸ்.சாந்து அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

📢 அதில் கூறியிருப்பதாவது:-

📝 தொலைதூரக்கல்வி வழியில் படிப்புகளை நடத்தும் ஒருசில பல்கலைக்கழகங்களும், கல்வி நிறுவனங்களும் பட்டச்சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்றிதழில் தொலைதூரக்கல்வி படிப்பு விவரத்தை குறிப்பிடாமல் பட்டங்களை வழங்குவது கண்டறியப்பட்டுள்ளது.

📋 இதனால், முறையாக கல்லூரிக்கு சென்று பயின்று (Regular) பெறப்பட்ட பட்டமா அல்லது தொலைதூரக்கல்வியில் பயின்று பெறப்பட்ட பட்டமா என்ற குழப்பம் ஏற்படுகிறது.

📝 இந்த குழப்பத்தை தவிர்க்கும் வகையில் தொலைதூரக்கல்வி படிப்பு விவரத்தை கல்விச் சான்றிதழ்களில் கண்டிப்பாக குறிப்பிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்