November 24, 2016

ரூபாய் சர்ச்சை:உச்சநீதிமன்றம் முடிவு!


ரூபாய் நோட்டு செல்லாது என்ற விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை விசாரிக்கக் கூடாது என்று தடை கோரிய மத்திய அரசின் மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் தாக்காலியுள்ள அனைத்து வழக்குகளையும் ஒரே நீதிமன்றத்தில் விசாரிக்க ஒப்புக்


கொண்டுள்ளது. கடந்த 8ஆம் தேதி இரவு முன்னறிவிப்பு எதுவும் இன்றி ரூபாய் 500,1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார் மோடி. இது மக்களிடையே பெரும் அதிர்ச்சிகளை உருவாக்கிய நிலையில், இந்தியாவின் ஏழு உயர்நீதிமன்றங்களில் 12 வழக்குகள் தொடரப்பட்டு அந்த வழக்குகள் உயர்நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. மத்திய அரசோ ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக தங்களைக் கேட்காமல் எந்த ஒரு முடிவையும் எடுக்கக்கூடாது என்று கேவியட் மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த நிலையில், மேலும் மாநில உயர்நீதிமன்றங்களில் வழக்கே தாக்கல் செய்யக்கூடாது, அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தது. ஆனால், அப்படி தடை எதனையும் விதிக்காத உச்சநீதிமன்றம் நாட்டின் வெவ்வேறு நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்துள்ள மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் மொத்தமாக இவ்வழக்குகளை விசாரிக்க உங்களுக்கு ஏதேனும் பிரச்னையா என்று கேட்டு மனுதாரர்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த மனு டிசம்பர் 2-ம் தேதி விசாரணைக்கு வரும். மாநில உயர்நீதிமன்றங்களில் ரூபாய் நோட்டு தொடர்பாக பதிவான வழக்குகளை உச்சநீதிமன்றம் விசாரிக்க முடிவு செய்திருப்பதன் மூலம் விரைவில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்