November 03, 2016

அரசு பள்ளியில், போதையில் தள்ளாடிய தலைமையாசிரியர், 'சஸ்பெண்ட்'

செய்யப்பட்டார்.தர்மபுரி அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் குணசேகரன்.

                 இவர் நேற்று முன்தினம் பள்ளியில், தன் அறையில் மது குடித்தார். போதை தலைக்கு ஏறிய நிலையில், தள்ளாடிபடி வெளியே வந்த
அவர், பள்ளி வளாகத்திற்கு வெளியே மது பாட்டிலை வீசியுள்ளார். இதை கண்ட அப்பகுதி மக்கள் குணசேகரனை தட்டி கேட்டனர். மேலும், மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு புகார் தெரிவித்தனர். மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் படி, கூடுதல் தொடக்க கல்வி அலுவலர் சம்பவ இடத்திற்கு சென்று, மக்களின் முற்றுகையில் இருந்த தலைமையாசிரியர் குணசேகரனை மீட்டார். பின், மக்களிடம் விசாரித்து, புகார் மனுவை பெற்றார். கல்வித்துறையினரின் விசாரணையில், குணசேகரன் பள்ளியில் மது அருந்தியது உண்மை என தெரியவந்தது. இதையடுத்து, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பழனிச்சாமி, தலைமையாசிரியர் குணசேகரனை, நேற்று சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்