November 19, 2016

பள்ளிகளில் புகார் பெட்டி : ஆசிரியர்கள் திறக்க தடை.


பள்ளிகளில் மாணவ, மாணவியர், தங்கள் குறைகளை தெரிவிக்க, புகார் பெட்டி வைக்கப்படுகிறது. 'அந்த பெட்டியை, தலைமை ஆசிரியர் மட்டுமே திறக்க வேண்டும்; மாணவர்களின் குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, உத்தரவிடப்பட்டு உள்ளது. ஆனால், பல பள்ளிகளில், ஆசிரியர்களே திறந்து, புகார்களை படித்து விடுகின்றனர். இதனால், ஆசிரியர்கள் மீது புகார் கூறியிருந்த மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இது தொடர்பான புகார்கள், இப்போது பெட்டிகளில் குவிய துவங்கி உள்ளன. இதையடுத்து, பள்ளி கல்வித் துறை இயக்குனர், கண்ணப்பன் பிறப்பித்துள்ள உத்தரவு வருமாறு: 

புகார் பெட்டிகளை, தலைமை ஆசிரியர் மட்டுமே திறந்து பார்த்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். மற்ற ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் திறக்கக் கூடாது. பள்ளிகளில் ஆய்வு நடத்த வரும் கல்வி அதிகாரிகள், இது குறித்து விசாரித்து, பெட்டியை வேறு யாராவது திறந்திருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்