November 02, 2016

சேலம் மாவட்டம் ராமிரெட்டி பட்டி ஆசிரியரின் அவல நிலை..


 இப்பள்ளியில் தலைமை ஆசிரியர் அப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியருக்கு பல்வேறு வழிகளில் துன்புரித்து வந்தார். இதற்கிடையில் அப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள்  மீது பல வீண் பழிகளை
சுமத்தினார். குறிப்பாக அங்கு பணியாற்றும் தமிழ் ஆசிரியர் மீது அங்கு படிக்கும் மாணவியை மிரட்டி பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தார் என லட்டர் எழுதி கையெழுத்து வாங்கி அவ்வாசிரியரை மிரட்டி வந்தார் . மேலும் அப்பள்ளி அவரது செந்த ஊர் என்பதால் அந்த ஊர் பொதுமக்கள் மற்றும் PTA தூண்டி விட்டு சாலை மறியல் செய்துள்ளnர் . விரைந்து வந்த தாசில்தார் , DSP, மற்றும் SP அவ்வாசிரியரை தண்டிப்பதாக வாக்குறுதி கொடுத்தனர்.

ஆனால் அப்பள்ளியில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களின் ஒற்றுமையால் SP மற்றும் தாசில்தாரிடம் அனைத்து மாணவிகளுடன் விசாரணை செய்து தமிழாசிரியர் குற்றம் அற்றவர் என கூறி தலைமையாசிரியரை கண்டித்து சென்று விட்டனர்.

மறுநாள் அப்பள்ளி ஆசிரியர்களை அழைத்து CEO விடம் சென்றேரம் .CEO அவர்களிடம் நடந்தவற்றை கூறினோம்.

*பாதிக்கப்பட்ட ஆசிரியரை நினைத்து பாருங்கள் பாலியல் புகார்*
 *அவ்வாசிரியரின் வீட்டில் அருகாமையில் உள்ள சொந்தம் மற்றும் நண்பர்கள் மற்ற பள்ளி ஆசிரியர்கள் கண்டிப்பாக இவர் மீது தவறாக எண்ண வாய்ப்புள்ளது என கூறினோம்*

*CEO அவர்கள் எங்களிடம் தமிழாசிரியர் குற்றமற்றவர் என கண்டிப்பாக அனைத்து பத்திரிக்கையிலும் செய்தி கொடுப்பதாக கூறினார்.*

CEO அவர்கள் அப்பள்ளியில் பணியாற்றும் தலைமையாசிரியரையும் அவருடன் அல்லக்கையாக செயல்பட்ட மற்றொறு ஆசிரியரையும் வேறு பள்ளிக்கு மாற்றி உத்தரவிட்டார்.

மீண்டும் அப்பள்ளி தலைமையாசிரியர் ஊர் மக்களை தூண்டி விட்டு தலைமையாசிரியரை மாற்ற கூடாது என சாலை மறியலில் ஈடுபட வைத்தார்.

எனவே அந்த பள்ளி தலைமை யாசிரியராலும் ஊர் பொதுமக்களாலும் அங்கு பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பாதுகாப் nல்லை எனப் பாதn ல் அனைவரையும் வேறு பள்ளிக்கு மாற்ற CE0 விடம் மனு அளிக்கப்பட்டது.

தகவல் : அலெக்ஸ் (TNGTA SALEM)

   

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்