November 09, 2016

தேர்வுத்துறை இயக்ககம் கல்வித்துறை அதிகாரிகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத ஆதார் எண் கட்டாயம் : தேர்வுத்துறை இயக்குனரகம் உத்தரவு
தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்கள் ஆதார் எண் இருந்தால்தான் பொதுத்தேர்வை எழுத முடியும் என்று அரசு தேர்வுத்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 2016-2017 பொதுத்தேர்வு வருகிற மார்ச் மாதம் நடக்க உள்ளது. இந்த பொதுத்தேர்வில் பல்வேறு புதிய மாற்றங்கள் கொண்டு வருவதாக தேர்வுத்துறை இயக்ககம் தெரிவித்து வருகிறது. இந்நிலையில் அரசு

அதில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்களை அரசு தேர்வுத்துறை இயக்ககம் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும்போது, மாணவர்களின் ஆதார் எண்ணையும் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்.
இதை வைத்துதான் இந்த ஆண்டு பொதுத்தேர்வில் பல்வேறு புதிய மாற்றங்கள் கொண்டுவரப்படும். ஆதார் எண் இருந்தால் மட்டுமே பொதுத்தேர்வை மாணவர்கள் எழுத முடியும். எனவே இந்த மாதத்திற்குள் மாணவர்களிடம் ஆதார் எண்ணை வாங்கவேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இதனால் தனியார் மற்றும் அரசு, அரசு நிதியுதவி பள்ளிகளில் பொதுத்தேர்வு மாணவர்கள் எத்தனை பேர்? இன்னும் எத்தனை பேர் ஆதார் எண் எடுக்கவில்லை என்று கணக்கெடுத்து, அந்த பள்ளிகளுக்கு ஆதார் எடுக்கும் சிறப்பு முகாம் அமைத்து, ஆதார் அட்டை வழங்க கல்வி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இந்த பணியை இந்த மாதத்திற்குள் முடிக்கவும் தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்