November 20, 2016

பட்டதாரி ஆசிரியர் நிலையில் இருந்து முதுகலை பட்டதாரி ஆசிரியராக பதவிஉயர்வு பெறுவதில் உள்ள விகிதாச்சார பிரச்சனைக்கு விரைவில் தீர்வு.

📚 பள்ளிக்கல்வி: பட்டதாரி ஆசிரியர் நிலையில் இருந்து (ஒரே பாடம், வெவ்வேறு பாடம்) முதுகலை பட்டதாரி ஆசிரியராக பதவிஉயர்வு பெறுவதில் தற்போது உள்ள விகிதாச்சார பிரச்சனை முடிவுக்கு வர உள்ளது.


📗 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வில் வரலாறு, புவியியல் பாடப்பிரிவுகளில் (ஒரே பாடம் / வெவ்வேறு பாடம்) பிரச்னையால் பலர் பாதிக்கப்பட்டனர். இதனை தீர்க்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

📘 முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களில் 50 சதவீதம் டி.ஆர்.பி., தேர்வு மூலமாகவும், 50 சதவீதம் பட்டதாரி ஆசிரியர்களின் பதவி உயர்வு மூலமாகவும் நிரப்பப்படுகின்றன. 

📗 பதவி உயர்வு மூலம் நிரப்புவதில் வரலாறு, புவியியல் பாடங்களுக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் கிடைப்பதில் பற்றாக்குறை இருந்தது.

📘 இதையடுத்து 18 அக்டோபர் 2000 தில் இளநிலையில் ஏதாவதொரு பட்டத்தை முடித்து,
முதுகலையில் வரலாறு, புவியியல், பாடப்பிரிவுகளை படித்தோர் வேறு பாடம் (கிராஸ் மேஜர்) 3 பங்கும், இளநிலை, முதுநிலை இரண்டிலும் ஒரே பாடப்பிரிவை எடுத்து படித்தோர் (சேம் மேஜர்) ஒரு பங்கும் நியமிக்க அரசாணை வெளியிடப்பட்டது.

📗 தற்போது அந்த பாடங்களில் ஓரே பாடத்தை (சேம் மேஜர்) முடித்தோரின் எண்ணிக்கை அதிகரித்த நிலையிலும் பழைய அரசாணைப்படியே முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் நடக்கிறது. இதனால் 'சேம் மேஜர்' முடித்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.  

📘 இதனை கண்டித்து பாதிக்கப்பட்டோர் போராடி வந்தனர்.

📗 இதையடுத்து முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வில் 1:3 என்ற விகிச்சார முறையை மாற்றியமைக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

📘 இதற்கான விபரங்களை 30 நவம்பருக்குள் அனுப்பி வைக்க பள்ளி கல்வித்துறை முதன்மைக் கல்வி அலுவலர்களை கேட்டு கொண்டுள்ளது.

📚 தமிழ்நாடு வரலாறு பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுச்செயலாளர் பழனியப்பன் கூறியதாவது: 'கிராஸ் மேஜர்,' 'சேம் மேஜர்' பிரச்னையால் பலர் பதவி உயர்வு கிடைக்காமலேயே ஓய்வு பெற்றனர். 

💐 15 ஆண்டுகள் போராட்டத்திற்கு தற்போது வெற்றி கிடைத்துள்ளது என்றார்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்