November 29, 2016

ஏடிஎம்“ இல் பணம் எடுக்க ஆதார் அட்டை மட்டும் போதும்..!!! அடுத்தகட்ட அசத்தல் நகர்வு...!!!


நம்மில்   எத்தனை பேருக்கு தெரியும்,  ஆதார்  கார்டை  பயன்படுத்தி , ஏ டி எம்  இல் பணம்  எடுக்க  முடியும்  என்று ....?
மகாராஷ்டிர  மாநிலத்தை  தலைமையிடமாக  கொண்டு செயல்படும் , DCB (Development Co-
operative Bank}, இந்த  புது திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.
இந்த  திட்டம்  ஆரம்பத்தில்,   ஏப்ரல் 2016 இல், மும்பையில்  ஆரம்பிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து , மக்களிடையே  எதிர்பார்த்த அளவிற்கு விழிப்புணர்வு  இல்லாததால்,  DCB (Development Co-operative Bank)  வங்கியின்   வாடிக்கையாளர்கள்   மட்டுமே  பயன்படுத்திவந்தனர்.
இந்நிலையில்,  கடந்த ஜூன்  மாதம் , பெங்களூருவில்  தங்கள்  சேவையை தொடங்கியது இந்த வங்கி.....
ஆதார்  அட்டையை  பயன்படுத்தி பணம்  எடுப்பது  எப்படி ?
  1. முதலில்  12  டிஜிட்  ஆதார்   எண்ணை , வங்கி கணக்கில் இணைக்க  வேண்டும்
  2. பின்னர் ஏ டி எம் மிஷினில் பணம்  எடுக்கும்  போது,  மிஷினில் உள்ள ஆப்ஷனை பயன்படுத்தி,    12  டிஜிட்  ஆதார்   எண்ணை பதிவிட வேண்டும்.
  3. பின்னர், பையோ மெட்ரிக்   விவரத்தை  கொடுக்கவும். அதாவது, நம்முடைய  கைரேகை  அல்லது  கருவிழியை  பதிவு  செய்யவும்.
  4. ஆதார்  அட்டை  மூலம் கைரேகை  கருவிழி  பயன்படுத்தி பணம்  எடுக்கும் போது,  நமக்கு   ஏ டி எம்  கார்ட்  தேவைப்படாது . அதே சமயத்தில்,  சீக்ரெட்   எண்ணும் பதிவிட வேண்டாம்.....
 இதனால் பலன்  என்ன ...?
  1. எப்பொழுதும்  நம் கையில்  கார்ட்  வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை
  2. ஏ டி எம்  காரட் தொலைந்தால், ஆதார்  எண்ணை வைத்து,  ஏ டி  எம்  சென்டரிலேயே  பிளாக்  செய்யலாம்.
  3. நம் ஆதார் எண்ணை பயன்படுத்தி , பணம் எடுப்பதில் முறைகேடு  நிகழாது.

 கருப்பு  பண   ஒழிப்பில்   தீவிரமாக  இறங்கியுள்ள  இந்தியா, இன்னும்  சில  மாதங்களிலேயே நினைத்து கூட   பார்க்க முடியாத  அளவுக்கு முனேற்ற பாதையில் செல்லும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை...
 இந்நிலையில், DCB (Development Co-operative Bank)   வங்கியானது, அடுத்து வரும் 6 மாதத்தில்,  இந்தியா முழுக்க  உள்ள  சுமார் நானூறு  ஏ டி எம்   மையங்களில்  இந்த  சேவையை  செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்