November 29, 2016

ஸ்வைப் இயந்திரங்களுக்கான (பாயிண்ட் ஆப் சேல் கருவி) வரி ரத்து - மத்திய அரசு அறிவிப்பு.



💳 ஸ்வைப் இயந்திரங்களுக்கான (பாயிண்ட் ஆப் சேல் கருவி) வரி ரத்து - மத்திய அரசு அறிவிப்பு.

💶 கடைகள் ‌மற்றும் பல்வேறு இடங்க‌ளில் பணம் செலுத்த உதவும் ஸ்வைப்‌‌ இயந்திரங்களுக்கு மத்திய அரசு தற்காலிகமாக வரி விலக்கு அளித்துள்ளது.

💷 இதன்படி, ஸ்வைப் இயந்திரங்களுக்கு விதிக்கப்பட்டு வந்த 12.5 % உற்பத்தி வரி, மற்றும் 4 % கூடுதல் வரி ரத்து செய்யப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.

💵 வரும் மார்ச் 31ம் தேதி வரை இச்சலுகை பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

📝 இதற்கான அறிவிக்கையை மத்திய நிதித்துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா வெளியிட்டார்.

💳 மின்னணு பணப்பரிவர்த்தனையின் அவசியம் அதிகரித்து வருவதால், ஸ்வைப் இயந்திரங்களின் தேவையும் உயர்ந்து வருகிறது.

💳 இதைத் தொடர்ந்து அவற்றின் பயன்பாட்டை பரவலாக்கும் வகையில் வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்