November 01, 2016

அகவிலைப்படி உயர்வு எப்போது?


'ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும்' என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, மத்திய
அரசு ஊழியர்களுக்கு, இரு மாதங்களுக்கு முன், இரண்டு சதவீத அகவிலைப் படி உயர்வு வழங்கப்பட்டது.
அதன்படி, தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சம்பளத்தையும், அகவிலைப் படியையும் உயர்த்த வேண்டும். ஆனால், நிதி நெருக்கடி காரணமாக, தமிழக அரசு தாமதம் செய்வதாக தெரிகிறது.

இந்நிலையில், அகவிலைப் படியை மட்டுமாவது உடனே உயர்த்த வேண்டும் என, ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச் செயலர் மீனாட்சி சுந்தரம் கூறுகையில், ''இந்த விஷயத்தில், மத்திய அரசு போல் தமிழக அரசும் செயல்படாமல், அகவிலைப்படியை ஆறு சதவீதமாக உயர்த்தி, உடனே வழங்க வேண்டும்,'' என்றார். 

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்