குழந்தைகள் ஆரம்பத்தில் கற்பவை தான் மனதில் ஆழப் பதியும். ஆரம்பத்தில் குழந்தைகள் 75% மேல், பெற்றோர் இடமிருந்து தான்
கற்கின்றனர். எனவே, பெற்றோர் குழந்தைகள் முன் அநாகரிகமான செயல்களில் ஈடுபட கூடாது.
மனைவியை அதட்டுதல், லஞ்சம் கொடுத்தல், வாங்குதல், வசைப் பாடுவது, ஏளனம் செய்வது, மதிப்பு அளிக்க மறுப்பது, குற்றம் செய்வது, நியாயத்தை மறைப்பது என பெற்றோர் சிறிய, பெரிய அளவில் செய்யும் எல்லா விஷயங்களும் குழந்தைகளின் மனதில் பதியும்.
பெற்றோர் குழந்தைகள் முன் இவ்வாறான அநாகரிகமான செயல்களில் ஈடுபடுவது, எதிர்காலத்தில், அவர்களும் அதே செயல்களில் ஈடுபட தூண்டும் என்பதை பெற்றோர் மறந்துவிட கூடாது. எனவே, இவற்றை மாற்றிக் கொள்ளுங்கள்...
கத்துதல்!
அதட்டுகிறேன், கட்டுப்படுத்துகிறேன் என தேவை இருந்தாலும், இல்லாமல் போனாலும் கத்தி பேசுவதை தவிர்க்க வேண்டும். இது, குழந்தை பருவத்திலேயே அவர்கள் மனதில் ஆழ பதிந்து. அடக்குமுறை பழக்கம் வளர காரணம் ஆகிவிடும்.
விரிவாக விளக்கம் அளித்தல்!
குழந்தைகள் இடம், பெரிதாக புரிதல் இருக்காது. எனவே, அவர்கள் ஏதாவது செய்தால் சுருக்கமாக, எளிதாக, எளிமையாக புரியும்படி விளக்கம் அளியுங்கள். நீங்கள் விரிவாக விளக்கம் அளித்தாலும் அது அவர்களுக்கு புரியப் போவதில்லை.
இலஞ்சம்!
இலஞ்சம் கொடுப்பதும் தவறு, இலஞ்சம் வாங்குவதும் தவறு. இதை உங்கள் குழந்தைகள் முன்னிலையில் செய்வது மிகப்பெரிய தவறு.
கடைப்பிடிக்காமல் இருத்தல்!
நீங்கள் சொல்லும் வார்த்தைகளை, அல்லது நீங்கள் உங்கள் உங்கள் குழந்தைக்கு புகட்டும் பாடங்கள், நன்னெறிகளை நீங்களே கடைப்பிடிக்காமல் இருப்பது தவறு.
முரண்பாடு!
ஊருக்கு ஒரு பேச்சு, எனக்கு ஒரு பேச்சு என ஊரு உபதேசம் செய்துவிட்டு, நீங்கள் வேறுவிதமாக வாழ்க்கை நடத்துவது தவறு.
கீழ்ப்படிதல்!
பெரியவர்களுக்கு கீழ்ப்படிந்து போகாமல் இருப்பதும் தவறு, மற்றவர்களை கீழ்ப்படிய வற்புறுத்துவதும் தவறு.
சீரான ஒழுங்குமுறை!
இப்படி தான் இருக்க வேண்டும், இதை இப்படி தான் செய்ய வேண்டும், என்ற ஒழுங்கு முறைகளை சீரான முறையில் பின்பற்ற வேண்டும். குழந்தைகளுக்கு முன் ஒரு மாதிரியும், அவர்கள் சென்ற பின் ஒரு மாதிரியும் நடந்துக் கொள்ள கூடாது.
No comments:
Post a Comment
குறிப்பு
1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்விக் கதிர்