உயிரிழந்த தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி (பி.எஃப்.) கணக்குகளில் இருந்து, சம்பந்தப்பட்ட உறவினர்களுக்கு 7 நாள்களில் வைப்புத் தொகையைத் திருப்பி அளிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மண்டல
அலுவலகங்களுக்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இ.பி.எஃப்.ஓ) செவ்வாய்க்கிழமை அனுப்பியது.
இதேபோல், பணி ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு அவர்கள் பணி ஓய்வு பெறுவதற்கு முன்பாகவே வைப்புத் தொகையை அளிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் இ.பி.எஃப்.ஓ. அனுப்பியுள்ளது. இதுதொடர்பாக, மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி தொடர்பாக, தில்லியில் கடந்த மாதம் 26-ஆம் தேதி நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி சில உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தார்.
அந்த உத்தரவுகளின் படி மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளை மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா, செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.
பணி ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கும், பணியின்போது உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கும் வைப்புத் தொகையை விரைந்து வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள், மண்டல அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சரிடம் மத்திய வருங்கால வைப்பு நிதி அமைப்பின் ஆணையர் கூறினார். அதன்படி, பணி ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு, அவர்கள் பணி ஓய்வுபெறும் நாளிலோ அல்லது அதற்கு முன்னதாகவோ வைப்புத் தொகையை வழங்கவும், உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு 7 நாள்களில் வைப்புத் தொகையை வழங்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு
1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்விக் கதிர்