November 27, 2016

இலவச ஜியோ மொபைலுக்கு ₹ 27,000-க்கு கட்டண ரசீது? - ரிலையன்ஸ் நிறுவனம் சொல்வது என்ன?

📲 இலவச ஜியோ சிம் -க்கு ₹ 27,000-க்கு கட்டண ரசீது? - ரிலையன்ஸ் நிறுவனம் சொல்வது என்ன?


📲 ரிலையன்ஸின் ஜியோ நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் தனது 4G சிம்களை வெளியிட்டது.

📲 அறிமுக சலுகையாக தனது வாடிக்கையாளர்களுக்கு வரும் டிசம்பர் மாதம் 31-ம் தேதி வரை அளவற்ற இலவச 4G இனையதள வசதியும், இலவசமாக பேசும் வசதியையும் அளித்திருந்தது.

📲 இந்நிலையில் குறுந்தகவல் செயிலியான வாட்ஸாப்பில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கொல்கத்தாவில் உள்ள வடிகையாளர் ஒருவருக்கு, ரசீது அனுப்பியுள்ளதாக அந்த ரசீதின் புகைப்படத்துடன் தகவல் பரவி வருகிறது.

📲 அவர் 554.37 GB data உபயோகித்துள்ளதகவும், 44.4 நிமிடங்கள் பேசியுள்ளதாகவும் இதற்கு அவர் 27,718 ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

📲 இது குறித்து ஜியோ நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

📱 “எங்கள் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு வரும் டிசம்பர் மாதம் வரை இலவச இனையதள சேவையும், இலவச தொலைபேசி சேவையும் வழங்கியுள்ளது.

📱 தற்போது வாட்ஸாப்பில் பரவி வரும் ரசீதின் புகைப்படம் போலியானது எனவும், எங்கள் நிறுவனம் அவ்வாறு எந்தவொரு வடிக்கையாளருக்கும் ரசீது அனுப்பவில்லை” என தெரிவித்துள்ளது.

📱 இதன்மூலம் கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களை கலக்கி வந்த ஜியோ புரளி முற்றுப் பெற்றுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்