November 20, 2016

வரும் 25 ஆம் தேதி முதல் புதிய 500 ரூபாய் நோட்டுகள் விநியோகம் ரிசர்வ் வங்கி அதிகாரி தகவல்


புதிய 500 ரூபாய் நோட்டு வருகிற 25ஆம் தேதி முதல் சென்னையில் விநியோகிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி அதிகாரி தெரிவித்துள்ளார்.
500, 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பொது மக்கள் பணத்தை மாற்ற
வங்கிகளுக்கு படையெடுத்தனர். பழைய நோட்டுகளுக்கு பதிலாக புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டு மட்டும் வங்கி மற்றும் ஏ.டி.எம். மையங்களில் விநியோகிக்கப்பட்டது. புதிய 500 ரூபாய் நோட்டு தமிழகத்தில் இன்னும் வினியோகம் செய்யப்படவில்லை. அதனால் கடுமையாக சில்லரை தட்டுப்பாடு ஏற்பட்டது. ரூ.2 ஆயிரம் நோட்டை மாற்ற முடியாமல் பொது மக்கள் பெறும் சிரமத்துக்கு ஆளாகினர்.
மளிகை கடை, பெட்டி கடை, காய்கறி கடை, ஓட்டல்களில் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டை வாங்க மறுப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கையிருப்பில் உள்ள 100, 50 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி விநியோகித்த போதிலும் சில்லரை தட்டுப்பாடு நீங்கவில்லை.
இந்நிலையில், புதிய 500 ரூபாய் நோட்டு விநியோகித்தால் மட்டுமே இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண முடியும் என்ற சூழ்நிலை உள்ளது. புதிய 500 ரூபாய் நோட்டுகள் வடமாநிலங்களில் புழக்கத்தில் வந்துவிட்டது. ஆனால் தமிழகத்துக்கு வருவதில் தாமதமானதால் பொதுமக்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர்.
புதிய 500 ரூபாய் நோட்டு சில நாட்களில் விநியோகிக்கப்படும் என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்த போதிலும் அவர்களுக்கே எப்போது வரும் என்பது தெரியாதநிலையில் இருந்தது. இந்நிலையில் புதிய 500 ரூபாய் நோட்டு வருகிற 25ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-
புதிய 500 ரூபாய் நோட்டு ஒரு சில மாநிலங்களில் மட்டுமே புழக்கத்தில் விடப்பட்டு உள்ளது. தமிழகத்துக்கு நாசிக்கில் அச்சடிக்கப்பட்டு அங்கிருந்து வர இருக்கிறது. 25ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள வங்கிகளில் புதிய 500 ரூபாய் நோட்டுகளை விநியோகம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம் என்றார்.
இந்த ரூபாய் நோட்டுகள் தமிழகத்திற்கு வந்து சேர்வதற்கான காலதாமதத்தை தவிர்ப்பதற்காக சரக்கு விமானங்கள் மூலம் ரூபாய் நோட்டுகளை கொண்டு வர அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். இதன் மூலம் சுமார் ஒரு மணி நேரத்தில் பணம் சென்னை வந்து சேர்ந்து விடும்.

புதிய ரூபாய் நோட்டுகள் நாசிக், மைசூரில் இருந்து தமிழகத்திற்கு கொண்டு வரப்படுகிறது. கண்டெய்னர்களில் வரும் இந்த பணம் சென்னை ரிசர்வ் வங்கியில் இருக்கப்பட்டு அனைத்து வங்கிகளுக்கும் பிரித்து அனுப்பப்படுகிறது. கண்டெய்னர்களில் ரூபாய் நோட்டு கொண்டு வருவதற்கு ஓரிரு நாட்கள் ஆவதால் பணம் பட்டு வாடாவில் தாமதம் ஏற்படுகிறது. இதை தவிர்க்க சரக்கு விமானங்கள் மூலம் ரூபாய் நோட்டுகளை கொண்டு வர அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். இதன் மூலம் சுமார் ஒரு மணி நேரத்தில் பணம் சென்னை வந்து சேர்ந்து விடும். நாளை 21ஆம் தேதி திங்கட்கிழமை முதல் இந்த வழிமுறைகள் பின்பற்றப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ரிசர்வ் வங்கிக்கு பணம் தேவையான அளவு வந்து கொண்டு இருக்கிறது. ஆனால் சென்னையில் இயங்கும் 2 ஆயிரம் வங்கி கிளைகளுக்கு பிரித்து அனுப்புவதில்தான் காலதாமதம் ஏற்படுகிறது என்றார்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்