November 20, 2016

2017 பிப்ரவரி மாத பொது பட்ஜெட்டில் வருமானவரி ரத்து.

2017 ம் ஆண்டு பிப்ரவரி மாத பொது பட்ஜெட்டில் வருமானவரி ரத்து செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


💶₹ பழைய ₹500, ₹1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அதிரடி அறிவிப்பால் கறுப்புப் பணத்தை வெளிக்காெண்டு வர முடியும் என்பது பிரதமர் நரேந்திரமோடியின் எண்ணமாக இருந்தது.

📢 நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல, எதையும் செய்யத் தயாராக இருப்பதாக பிரதமர்  திட்டவட்டமாக தொிவித்துள்ளார்.

📢 சமீபத்தில் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசும் போது, 'இன்னும் பல திட்டங்கள் என் மனதில் உள்ளன' என கூறியிருக்கிறார்.

📰 அது என்ன புது திட்டம்?

📇 அரசியல்வாதிகள், அதிகாரிகள் வட்டாரங்களில் கூறப்படுவது என்னவென்றால், வரும் 2017 பிப்ரவரி மாதம் அரசு சமர்ப்பிக்க உள்ள மத்திய பட்ஜெட்டில், வருமான வரியை ரத்து செய்யப்பாேவதாகவும், அதற்கு பதிலாக இரண்டு வரிகள் அமலில் வரப்பாேவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

📰 இந்த திட்டங்கள் அமலில் வந்தவுடன்,

🏦 வங்கி மூலமாக வாங்கும் பொருட்களுக்கு வரி.- இதை, 'பேங்கிங் டிரான்சாக்சன்' வரி என்கின்றனர்.

📑 இன்னொன்று: சரக்கு மற்றும் சேவை வரி. இந்த புதிய திட்டம் அமல்படுத்தப்பட்டால், பொருளாதாரத்தில் பெரும் முன்னேற்றம் ஏற்படும் என்பதோடு, வருமானவரி நீக்கப்பட்டால் நடுத்தர வகுப்பினர் மிகவும் மகிழ்ச்சி அடைவர் என்பதே பிரதமரின் திட்டமாக உள்ளது என கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்