November 10, 2016

அடுத்தது 100 ரூபாய்க்கும் ஆப்பு என எதிர்பார்க்கப்படுகிறது? புதிய 100, 150, 20 ரூபாய் நாணயம் தயார்!


தற்போது கையில் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகளை நாளை முதல் பெறலாம் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது செலவுக்கு கையில் பணம்
இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

100 ரூபாய் நோட்டுக்கு தற்போது கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கையில் உள்ள 500, 1000 ரூபாய்க்களை மக்கள் 100 ரூபாயாக மாற்றுவதால் தற்போது 100 ரூபாய் நோட்டு தான் அதிகபட்ச பணமாக உள்ளது. இந்நிலையில் அடுத்ததாக 100 ரூபயையும் அரசு செல்லாது என அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வருகின்றன.

100 ரூபாய் நோட்டுகளை முடக்கிவிட்டு அதற்கு பதிலாக புதிய 100, 150, 20 ரூபாய் நாணயங்கள் ஏற்கனவே அச்சிடப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மக்கள் கையில் புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் ஓரளவுக்கு வந்த பிறகு அடுத்த வருட தொடக்கத்தில் 100 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்