October 15, 2016

வாட்ஸ் அப்பில் invite link என்பது ஆபத்தை வரவழைக்கும் அழைப்பு. எப்படி..?


இன்று வாட்ஸ்அப் உட்பட சமூக வலைதளங்கள் அனைத்துமே அரசு மற்றும் காவல்துறையால் கண்காணிக்க படுகிறது.

வாட்ஸ்அப்பில் ஆபாசம் புகுந்து சமூகத்தை குந்தகம் விளைவிக்கும்
முறையில் சட்டத்திற்கு புறம்பான செய்திகளை அனுப்பும் போது அதை புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் அந்த செய்தியை அனுப்பினவர் மீது நடவடிக்கை எடுக்கும். தேவைப்பட்டால் குரூப் அட்மின் மீதும் நடவடிக்கை வரும்.

ஒரு குரூப்பை ஆரம்பிக்கும் அட்மின்களுக்கும் இதன் மீது பொறுப்பு உண்டு. சட்டத்திற்கு புறம்பான செய்திகளை பதிவிட்டு அந்த செய்தி புகாரானால் அந்த குழுமத்தின் அட்மினும் அதற்கு பதில் சொல்லி ஆகவேண்டும்.

சாதாரணமான முறையில் ஒரு குரூப் அட்மின் தமது குழுமத்தில் இணைக்கும் நபரின் பெயர், ஊர், வேலை போன்ற விபரங்களை ஆராய்ந்து அறிந்து குழுமத்தில் இணைப்பார்.

இதனால் அந்த நபரால் ஏதேனும் தவறான செய்தி வந்தால் எளிதில் அட்மினால் கண்காணிப்பது மட்டுமின்றி அவரை குழுத்தை விட்டு நீக்குவதால் மற்றவர்களும் தவறான பதிவிடாமல் கவனத்தோடு இருப்பார்கள். குழுமமும் அட்மின் விதிக்கும் விதிமுறைக்குட்பட்டு ஒழுங்கான முறையில் இருக்கும்.

அதே நேரத்தில் வாட்ஸ் அப்பில் invite link மூலம் இணைத்தால் குழுமத்தின் பாதுகாப்பு தன்மை அறவே இருக்காது. இதனால் பல பிரச்சினைகளை அட்மினும் மற்ற உறுப்பினர்களும் சந்திக்க வேண்டி இருக்கும்.

நாமும் அட்மினாக இருந்து புதிய குழுமத்தை ஆரம்பித்து தனது வாட்ஸ்அப் குரூப்பை பிரபலபடுத்த வேண்டும் என்றும் குரூப் முழுவதும் ஆட்கள் இணைக்க வேண்டும் என்றும் invite link மூலம் மற்ற குழுமத்திற்கு பார்வேர்ட் செய்து அனுப்புகிறோம். அட்மின் அனுமதி இல்லாமல் link மூலம் இணைவதால் அவர் யார்? எந்த ஊர்? என்ன பெயர்..? போன்ற எந்த ஒரு விபரமும் தெரியாது.

கட்டுகோப்பாகவும் பயனுள்ள தகவல் வரும் குருப்பை சில நிமிடங்களிலே சிதைக்க முடியும். link ல் இணைந்தவனால்...

* புரோபைல் போட்டோ வைக்காமல் பெயரும் வைக்காமல் மொட்டையாக வருவான்.

* குரூப்பின் ஐகானை ஆபாச போட்டோ வைத்து ஐகானை மாற்றுவான்.

* மோசமான கெட்ட வார்த்தையால் குரூப்பின் பெயரை மாற்றுவான்.

* ஆபாசம் மற்றும் பிரச்சனைக்குரிய செய்தியை போஸ்ட் செய்வான்.

* கெட்டகெட்ட வார்த்தைகளால் ஆடியோவாகவோ எழுத்து வடிவிலோ கமென்ட்ஸ் அனுப்புவான்.

 *அட்மின் அவனை ரிமூவ் செய்தால் வேறு நம்பரில் link மூலம் அதே குழுமத்தில் இணைவான்.

*அவன் நம்பரை தொடர்பு கொண்டால் சம்பந்தமில்லாத வேறு நபர் பேசுவார் அல்லது சுவிட் ஆஃப் ஆக வரும்.

*வேறு ஒருவரின் நம்பரில் அவன் எப்படி வாட்ஸ்அப்பில் வந்தான் என்று சிரமபட்டு ஆராய அவசியமில்லை.

உதாரணமாக...

உங்களின் சாதாரண பழைய செல்போன் ஈஸி செய்யவோ அல்லது வேறு யாராவதோ உங்கள் மொபைலை வாங்கினால் கவனமாக நாமும் உடனிருந்து பார்க்க வேண்டும்.

ஏனெனில் அவனின் ஸ்மார்ட் போனில் வாட்ஸ்அப்பை இன்ஸ்டால் செய்து உங்கள் நம்பரை அதில் கொடுப்பான் பின்னர் verification code number உங்கள் போனில் உடனடியாக வரும் அப்போது உங்களிடம் அவசரமாக ஒரு போன் செய்ய வேண்டும் என்று ஏதாவது கூறி verification code number எடுத்து விட்டு போனை தந்து விடுவான்.

உங்களுக்கும் அவனுக்கும் உறவு முடிந்தது என்றிருப்பீர்கள் ஆனால் அப்படியில்லை உங்கள் நம்பர் மூலம் உங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் குறிப்பாக பெண்களிடம் தவறாக நடக்க முயற்சிக்கபடும்.

உங்கள் நம்பர் தான் என்று உங்களுக்கு வேண்டிய அல்லது உறவினர்கள், பெண்கள் உங்களுக்கு முக்கிய தகவல்கள், குடும்ப போட்டோக்கள், குடும்பத்தின் முக்கிய வீடியோக்கள் அனுப்புவார்கள். அதை உங்களுக்கே தெரியாமல் அவன் பயன்படுத்துவான்.

மேலும்...

invite link உள்ள குழுமங்களில் உள்ளே புகுந்து உங்கள் நம்பரில் தவறான பல செய்திகளை பதிவிடுவான். அது பிரச்சனை ஆகும்பட்சத்தில்  உங்கள் போன் நம்பரில் வாட்ஸ்அப் இருப்பதால் நீங்களும் குரூப் அட்மினும் மாட்டுவார்கள்..

நல்ல பயனுள்ள செய்திகளை வாட்ஸ்அப்பில் அனுப்புவது கண்ணியமான செயலாக இருக்கும்பட்சத்தில் invite link மூலமாக ஊர் பெயர் தெரியாத எவனையோ அழைத்து உங்கள் கண்ணியத்தை இழந்து பிரச்சனைக்கு ஆளாகாதீர்கள். ஆகவே நீங்கள் அட்மினாக இருக்கும் வாட்ஸ்அப் குழுமத்தில் invite link ஆப்ஷன் இருந்தால் அதை நீக்கிவிடுங்கள்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்