October 21, 2016

ஆல் பாஸ்' வேண்டாம் : நிபுணர் குழு பரிந்துரை..


புதிய கல்வி கொள்கையை வகுக்க பரிந்துரைகள் அளிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழு, 'ஆல் பாஸ்' என்ற, எட்டாம் வகுப்பு வரையில் அனைவரும் தேர்ச்சி முறையை கைவிட
வேண்டும் என, வலியுறுத்தி உள்ளது.

கல்வி உரிமை சட்டத்தின் கீழ், அனைவருக்கும் கல்வி கிடைக்கும் வகையில், எட்டாம் வகுப்பு வரை, மாணவர்கள் அனைவரையும் தேர்ச்சி பெற வைக்க வேண்டும். ஆனால், இந்த முறையால், மாணவர்களின் திறமை குறைந்து வருகிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில், புதிய கல்விக் கொள்கையை கொண்டு வருவது குறித்து பரிந்துரைகள் அளிப்பதற்காக, மத்திய கல்வி ஆலோசனை வாரியத்தின் துணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த துணைக் குழு, பல்வேறு மாநிலங்கள் மற்றும் கல்வியாளர்களுடன் ஆலோசனை நடத்தி, 189 பக்க அறிக்கையை தாக்கல் செய்துள்ளது; அதில், 'ஆல் பாஸ்' முறையை கைவிட வேண்டும் என்ற முக்கிய பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, மாநில பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்வித் துறை அமைச்சர்கள் அடங்கிய, மத்திய கல்வி ஆலோசனை வாரியத்தின் கூட்டம், வரும், 25ல் நடக்க உள்ளது; அதில், இந்த பரிந்துரைகள் குறித்து ஆராயப்பட உள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்