October 10, 2016

பி.எட். கல்லூரிகளுக்கான வழிகாட்டுதலில் மாற்றங்கள் செய்ய என்.சி.டி.இ. முடிவு.


ஆசிரியர் கல்வியியல் (பி.எட்.) கல்லூரிகளுக்கான -2014 வழிகாட்டுதலில் மாற்றங்களைக் கொண்டுவர தேசிய ஆசிரியர் கல்வியியல் கல்விக் கவுன்சில் (என்.சி.டி.இ.) முடிவு செய்துள்ளது. 

இதற்காக பல்வேறு தரப்பினரிடமிருந்து கருத்துக்களையும், பரிந்துரைகளையும் என்.சி.டி.இ. வரவேற்றுள்ளது. நாடு முழுவதும் உள்ள ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளுக்கான புதிய வழிகாட்டுதலை என்.சி.டி.இ. கடந்த 2014 ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது. அந்த புதிய வழிகாட்டுதலின்படி, 2015-16 கல்வியாண்டு முதல் பி.எட். படிப்புக் காலம் ஓராண்டிலிருந்து இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்பட்டது. 

மேலும், மாணவர் சேர்க்கை எண்ணிக்கை குறைப்பு, பயிற்சிக் காலம் அதிகரிப்பு என்பன உள்ளிட்ட பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. இதற்கு தமிழகம் உள்பட சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இருந்தபோதும், புதிய வழிகாட்டுதலை என்.சி.டி.இ. நடைமுறைப்படுத்தியது. இப்போது புதிய வழிகாட்டுதல் நடைமுறைக்கு வந்து ஓராண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில், பல்வேறு தரப்பினரிடமிருந்து இதுவரை வந்த புகார்கள், நீதிமன்ற வழக்கு முடிவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் 2014 வழிகாட்டுதலில் மாற்றங்களைக் கொண்டுவர என்.சி.டி.இ. 
முடிவு எடுத்திருக்கிறது. 

இதற்காக ஒரு குழுவையும் அமைத்துள்ளது. இதற்காக பல்வேறு தரப்பினரிடமிருந்து கருத்துக்களையும், ஆலோசனைகளையும் வரவேற்றுள்ளது. இந்தக் கருத்துக்களை regulation@ncte-india.org என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாக அல்லது தபால் மூலமாகவும் அனுப்பலாம். சமர்ப்பிக்க அக்டோபர் 30 கடைசித் தேதியாகும்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்