October 07, 2016

வேட்பாளர்கள் திண்டாட்டம் வாக்காளர்கள் கொண்டாட்டம்



வரும் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் தமிழக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இதற்காக வேட்புமனுதாக்கல் கடந்த 26 ந்தேதி தொடங்கி இம்மாதம் 3ந்தேதி முடிய நடைபெற்றது.
வேட்பாளர்கள்  தங்கள் ஆதரவாளர்களுடன் அவர்களுக்கு வேண்டிய சகலவசதிகளையும் செய்து மிகுந்த ஆரவாரத்துடனும் உற்சாகத்துடனும் பல்வேறு கனவுகளோடும் சென்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

ஆனால் தற்போது தேர்தல் ரத்து செய்யப்பட்டு விட்டதால் வேட்பாளர்கள் இவ்வளவு செலவுசெய்தும் வீணாகப்போய்விட்டதே என்று மிகுந்த ஏமாற்றமடைத்துள்ளனர்.
இந்நிலையில் வேட்பாளர்கள் யாரும் டெபாசிட் தொகையை திரும்ப பெற அவசரம் காட்ட வேண்டாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதால் மீண்டும் ஒருமுறை வேட்புமனு தாக்கல் செய்யும் நிலை வராது என்கிற நம்பிக்கையில் ஓரளவு திருப்தியடைந்துள்ளனர்.

ஆனாலும் தனது ஆதரவாளர்களை அவர்கள் எதிர் முகாமுக்குச் சென்றுவிடாமல் தக்கவைத்துக்கொள்ள அன்றாடமும் அவர்களை உபசரித்து வருகின்றனர்.இதனால் வேட்பாளர்களின் ஆதரவாளர்களும்  வாக்காளர்களும் மிகுந்த உற்சாகத்துடன் காணப்படுகின்றனர்.
வேட்பாளர்கள் தங்களுக்கு வெற்றி கிடைக்குமா,கிடைக்காதா என்ற குழப்பத்திலேயே வாக்காளர்களை தக்கவைத்துக் கொண்டிருக்கின்றனர்.

வரும் 18ஆம் தேதியன்று தேர்தல் தொடர்பான மேல்முறையீட்டு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளதால் அந்த விசாரணையில் என்ன தீர்ப்பு வரப்போகிறதோ என்ற ஆவலில் வேட்பாளர்கள் உள்ளனர்.அதாவது  தற்போது நடந்துமுடிந்துள்ள தேர்தல் நடவடிக்கைகளிலிருந்து  தொடருமா அல்லது மீண்டும் முதலிலிருந்து தொடங்க வேண்டுமா  என்பதை அறிந்துகொள்ள ஆவலாக உள்ளனர்.

இதேநிலையில்தான் தேர்தல் தடத்தும்  அதிகாரிகள் மற்றும் அலுவலர்களும் உள்ளனர்.

மொத்தத்தில் தேர்தல் முடியும் வரை வேட்பாளர்களுக்கு திண்டாட்டமும் வாக்காளர்களுக்கு கொண்டாட்டமும்தான் என்பதை மறுப்பதற்கில்லை.
ஒருசில வாக்காளர்கள் இப்பொழுதே தீபாவளிப்பண்டிகை தொடங்கிவிட்டதைப்போல கொண்டாடி வருகின்றனர்.
                                           

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்