October 25, 2016

வினா வங்கி புத்தகம் இன்று முதல் விற்பனை...


கல்வித் துறையின் கீழ் இயங்கும், பெற்றோர், ஆசிரியர் கழகம், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, முந்தைய பொதுத்தேர்வுகளின் வினாக்கள் அடங்கிய, வினா வங்கி
புத்தகத்தை தயாரித்துள்ளது.

இதில், தற்போதைய பாடத்திட்டம் அமலுக்கு வந்த, 2006 முதல், கடந்த செப்., வரை நடந்த, பல தேர்வுகளின் வினாத்தாள்கள் இடம் பெற்றுள்ளன. இந்த புத்தகம், இன்று முதல் சிறப்பு மையங்களில் விற்பனை செய்யப்படும். வணிகவியல், கணக்கு பதிவியல், பொருளியல் மாணவர்களுக்கு மட்டும், நவ., இறுதியில் தான் புத்தகம் கிடைக்கும்.

 சென்னையில், டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள, பெற்றோர், ஆசிரியர் கழக அலுவலகத்தின் சிறப்பு கவுன்டர்கள் சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலை, எம்.சி.சி., பள்ளி, எம்.எம்.டி.ஏ., காலனி அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் சைதாப்பேட்டை ஜெய்கோபால் கரோடியா மகளிர் பள்ளி குரோம்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி திருவள்ளூர், ஆர்.எம்.ஜெயின் மகளிர் பள்ளி ஆகியவற்றில், வினா வங்கி புத்தகங்கள் கிடைக்கும்

 தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக, ஒரு அரசு பள்ளியில், வினா வங்கி புத்தகம் கிடைக்கும். அதன் முகவரியை, மாவட்ட முதன்மை கல்வி, மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகம் மற்றும் அரசு பள்ளிகளில் தெரிந்து கொள்ளலாம்

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்